முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியிடம் இறுதி விசாரணை

புதன்கிழமை, 5 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் இறுதி விசாரணை நேற்று தொடங்கியது.  காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தி.மு.கவை சேர்ந்த ஆ. ராசா மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை முறைகேடாக ஏலம் விட் டதில் நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த மெகா ஊழல் தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த ஆ. ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. சி.பி.ஐ. தரப்பில் இறுதி வாதங்கள் முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த ராசா உள்ளிட்ட 16 பேரிடம் இறுதி விசாரணை ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இறுதியாக கனிமொழியிடம் நேற்று இறுதி விசாரணை தொடங்கியுள்ளது. நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெறும் இந்த விசாரணை, இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்