முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கியில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - வங்கியில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட்டம்
மும்பையில் நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி (ரெப்போ) விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

உற்பத்தி அதிகரிக்கும்
ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு மொத்த உற்பத்தி 2016-17 ஆண்டில் 6.9 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும்,  2017-18 ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத அறிவிப்பு
மொத்த ரொக்க கையிருப்பு விகிதமும் (சிஆர்ஆர்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அது 4 சதவீதமாகவே நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஏமாற்றமளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago