முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் இரு தொகுதிகளிலும் தோல்வி

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

டேராடூன்  - உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஹரிஷ் ராவத் ஹரித்வார், கிச்சா ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

இரு தொகுதிகளில் போட்டி
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்வார்  புறநகர், கிச்சா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.  உத்தரகாண்ட் மாநில அரசியல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க வேட்பாளர்களிடம்...
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஹரித்வார் புறநகர், கிச்சா ஆகிய இரு தொகுதிகளிலும் முதல் மந்திரி ஹரிஷ் ராவத் தோல்வியை தழுவியுள்ளார். ஹரித்வார் புறநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் யத்தீஷ்வரானந்த் என்பவரிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், கிச்சா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ராஜேஷ் சுக்லாவிடம் 2154 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தார்.இதையடுத்து, நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்