முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா அமித்ஷா முன்னிலையில் நாளை பா.ஜ.கவில் இணைகிறார்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான எஸ்.எம் கிருஷ்ணா நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

பேச்சுவார்த்தை
கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம் கிருஷ்ணா காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளார். பல ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கும் எஸ்.எம் கிருஷ்ணா, சில காலமாக காங்கிரஸில் ஈடுபாடில்லாமல் இருந்து வருகிறார். இவரை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் கர்நாடக பாஜக தலைவர் எட்டியூரப்பா கிருஷ்ணாவிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்.

பா.ஜ.க.வில் இணைகிறார்
அதோடு பாஜகவில் இணைந்தால் துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவி உட்பட பல சலுகை வழங்கப்படும் என்ற பல ஆஃபர்கள் எஸ்.எம் கிருஷ்ணாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கிருஷ்ணா திட்டமிட்டபடி நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார். கர்நாடகாவின், மாண்டியாவை சேர்ந்த எஸ்.எம் கிருஷ்ணா பாஜகவில் இணைந்தால், மாண்டியா, மைசூரை சேர்ந்த காங்கிரசை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்