முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

  குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சூப், ஜுஸ், போ‎ன்றவைகளுக்குப் பதிலாக பச்சைக் காய்கறிகள் பழங்களை அதிகமாக சாப்பிடக்  கொடுங்கள். இது நல்ல செரிமானத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு  வழிவகுக்கும். எப்போதும் குழந்தைகளை விமர்சிக்கும் போது நெகடி‎வ்  அணுகுமுறையைக் கையாளாதீர்கள். அவர்களூடைய பல‎ங்களை எடுத்து சொல்லி  இன்னும் சிறப்பாக எ‎ன்னென்ன செய்யலாம் , என்னென்னவற்றைத் தவிர்க்கலாம்  என்று எடுத்து சொல்லி ஊக்கம் கொடுங்கள். அதே சமயத்தில் ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்துவது அவசியம் எ‎ன்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை ஏதோ உலக  சாதனை போல் புகழ்ந்து தள்ளாதீர்கள். உங்கள் பாராட்டு என்பது, தேவையான  அளவிலான நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும். வீட்டில் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசாதீர்கள். குழந்தைகளும் அதையே  பி‎ன்பற்றுவார்கள். இது ரொம்ப தவறு. சக மாணவர்கள் தொடங்கி, எல்லோரிடமும் அ‎ன்பாய் இருக்கவும், அதே சமயம் மதிக்கவும் கற்றுத் தாருங்கள்.

கவனிக்க  பெற்றோரே!

உங்கள் குழந்தையை புத்திசாலி, சமத்து, கெட்டிக்காரி என்று அடிக்கடி  புகழுங்கள்.  ஏதேனும் தவறு செய்தால் கண்டிப்பதைவிட அறிவாளியான நீயா  இப்படி செய்தாய்? என்று ஆச்சரியப்பட்டு பாருங்கள். விளைவு, சந்தோஷமானதாய் இருக்கும். ஜப்பான் நாட்டு குழந்தை தப்பு செய்தால் தாய், "ஒரு ஜப்பான்  குழந்தை இது போல் பிழை செய்யலாமா?' என்று வினவுவாராம். அந்த நாட்டின்  முன்னேற்றத்திற்கான காரணம் அதுதான். நெருப்பை தொடாதே என்று  அச்சுறுத்துவதை விட தீயை தொட்ட ஒருவரின் துன்பத்தை விளக்கி சொன்னால்  போதும், மற்ற குழந்தைகளும் நெருப்பை தொடாமல் உங்கள் குழந்தையே பார்த்து  கொள்ளும். நம்மவர்களும் காமிக்ஸ் ப்ரியர்களே! இங்கிலாந்து, அமெரிக்கா  உள்ளிட்ட மேலை நாடுகளில் சிறுவர்  சிறுமியர்களுக்கான தந்திர  கதைகளுக்கும், காமிக்ஸ் கதைகளுக்கும் உள்ள வரவேற்பு இந்தியாவில் இல்லையே  ஏன்?

இவ்வாறான தந்திர கதைகளுக்கு மேலை நாடுகளில் உள்ள வரவேற்பு இந்தியாவிலும்  உள்ளது. ஆனால், இந்த வரவேற்பு ஆங்கிலத்தில் படிக்கும் மேல் தட்டு  குழந்தைகளுக்கு மத்தியில் தான். அண்மையில் வெளியான "ஹாரி பாட்டர்' கதை  இந்தியாவிலேயே ஒரு லட்சம் பிரதி விற்பனை ஆயிற்று. தமிழ் போன்ற மற்ற  மொழிகளிலும் அவ்வாறான கதைகளும் படக் கதைகளும் கிடைத்தால் நிச்சயம்  ஆர்வத்துடன் படிப்பர்.

குழந்தைகளை எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் செலவிட அனுமதிக்கலாம்?

கம்ப்யூட்டர் விளையாட்டுகளைத் தவிர பல கல்வியறிவு ஊட்டக்கூடிய  சாப்ட்வேர்கள் இப்போது ஏராளமாக வந்துள்ளன. இவை விரைவாகவும், ஆர்வமுடனும்  கல்வி கற்க குழந்தைகளுக்கு உதவுகிறது. சில விளையாட்டுகள் குழந்தைகளின்  மனவளர்ச்சியை அதிகரிக்கச் செய்வது உண்மை என்றாலும், அவர்கள் அதற்கு  அடிமையாகிவிட அனுமதிக்கக் கூடாது. தினமும் அரை மணி நேரம் னுமதிக்கலாம். நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் செலவழித்தால், அது முதுகு மற்றும் கழுத்து  வலியை ஏற்படுத்திவிடும். மேலும் கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர் திரையையே  பார்த்துக் கொண்டிருந்தால் கண் பார்வை மங்குவதோடு கண்களில் ஈரப்பதம்  நீங்கி எரிச்சலும் ஏற்படும். கம்ப்யூட்டர் தனிமையை ஊக்குவிப்பதால்  குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். மைதானங்களில் விளையாடுவதும், சமூகத்துடன் அதிக நேரம் செலவிடுவதும் கம்ப்யூட்டர் தரும் அறிவை விட  அதிகமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்