முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் புதிய பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தலைமையில் புதிய பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள மேற்கு மண்டலத்தில் 8 வார்டுகளாகிய வார்டு எண்.10,11,12,13,14,15,20 மற்றும் 21, கிழக்கு மண்டலத்தில் வார்டு எண்.75, மத்திய மண்டலத்தில் வார்டு எண்.74, தெற்கு மண்டலத்தில் 7 வார்டுகளாகிய வார்டு எண்.75,76,77,78,79,85 மற்றும் 86 ஆகிய 16 வார்டுகளில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் 16,874 வழங்கப்பட வேண்டும். தற்போது மேற்குறிப்பிட்ட குடியிருப்புதாரர்களிடம் 1857 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஆகவே அப்பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்கள் தாங்களே புதிய பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் விண்ணப்பங்கள் பெற முன் வரவேண்டும்.

மாநகராட்சி அலுவலர்களுக்கு குடியிருப்புதாரர்கள் முழு ஒத்துழைப்பு தந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் புதிய பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பாதாள சாக்கடை இணைப்பு பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன். குடியிருப்புதாரர்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மாநகராட்சி வாகனங்களோ மற்றும் தனியார் கழிவுநீர் வாகனங்களோ பயன்படுத்தக் கூடாது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன்   தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி , கண்காணிப்புப் பொறியாளர் நடராஜன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணகுமார், மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago