முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் : விசாரணை நடத்த உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
Image Unavailable

பம்பை - கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து, கடும் விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்பதால் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் சிலர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட புகைப்படங் கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தையும், கேரள அரசையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த புகைப் படங்களின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வருமாறு தேவஸ்வம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சுரேந்திரன் கூறுயபோது, ‘‘கொல்லம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சபரி மலையில் விசேஷ தரிசனம் செய் வதற்கான அனுமதி அளிக்கப் பட்டது. அதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வயதுவரை தடை செய்யப் பட்ட பெண்கள் சிலரைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவர் தரிசனம் செய்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. விஐபி தரிசனம் என்ற பெயரில் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை தவறாக பயன் படுத்துவது சட்டவிரோதமானது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago