முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரமபலூர் மாவட்டத்தில் 453.77 ஹெக்டேர் பரப்பிலான வயல்களுக்கு அரசின் மானிய உதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது : செய்தியாளர் பயணத்தில் வேளாண் இணை இயக்குநர் சுதர்சன் தகவல்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த செய்தியாளர் பயணம் ஆலத்தூர் வட்டாரத்திற்குப்பட்ட மங்கூன், பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட நெடுவாசல், செங்குணம்;; உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை இணை இயக்குநர் சுதர்சன் தலைமையில் நேற்று (26.04.17) மேற்கொள்ளப்பட்டது.

 சமச்சீர் வளர்ச்சி

 விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பெருக்கும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் ஆலத்தூர் வட்டம் செங்குணம் பகுதியில் ரூ.1.61 லட்சம் மதிப்பில் ரூ.80,500 அரசு மானிய உதவித்தொகையுடன் பயனடைந்த ஜெகன்மோகன் என்ற விவசாயி தனது நிலத்தில் அமைத்திருந்த ஒருங்கிணைந்த பண்ணையையும், பெரம்பலூர் வட்டத்தில் நெடுவாசல் பகுதியில்; சுரேஸ் என்பவரது வயலில் 100 சதவீத மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசன அமைப்பு உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த மக்காச்சோள வயலினையும், செங்குணம் பகுதியில் நாகராஜன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த உளுந்து விதைப்பண்ணையையும் செய்தியாளர்களுடன் சென்று வேளாண் இணைஇயக்குநர் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

 அதனை தொடர்ந்து வேளாண்த்துறை இணை இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில்; தலா 25 விவசாயிகள் வீதம் 50 விவசாயிகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தலா ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.66,000 மதிப்புடைய இரண்டு ஜெர்சி மாடுகள், ரூ.30,000 மதிப்புடைய 11 வெள்ளாடுகள், ரூ.5,000 மதிப்புடைய 30 நாட்டுக்கோழிகள், ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்பட்ட சாணஎரிவாயுக்கலன், ரூ.25,000 மதிப்பிலான மண்புழு தயாரிக்கும் அமைப்புகள்,ரூ.15,000 மதிப்புடைய தீவனப்புல் வளர்ப்பு திட்டம் என மொத்தம் ரூ.1,61,000 மதிப்பிலான இத்திட்டத்தை அரசின் 50 சதவீத மானிய உதவித்தொகையான ரூ.80,500 மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கென ஒரு வட்டாரத்திற்கு ரூ.20.12 லட்சம் வீதம் இரண்டு வட்டாரங்களுக்கு 40.24 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஒரு விவசாயி தனது தொழில் சார்ந்து தன்னிறைவு அடைவதுடன், அங்கு உருவாக்கப்படும் பயோ கேஸ் மூலம் வீட்டிற்குத்தேவையான எரிவாயுவையும் உற்பத்திசெய்துகொள்ள முடிகின்றது.

விவசாய பணிகளுக்காக தேவைப்படும் நீரின் அளவினை குறைக்கும் வகையில் விவசாய நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசன அமைப்பு ஏற்ப்படுத்திட 2015 முதல் நடப்பாண்டுவரை மொத்தம் 444 விவசாயிகளுக்கு 453.77 ஹெக்டேர் பரப்பிலான வயல்களுக்கு அரசின் மானிய உதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்ப்படுத்திட சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.1,00,000- வரையும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம் மான்யமாக ரூ.75,000- வரையும், தெளிப்புநீர் பாசன கருவி சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.19,600- வரையிலும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம மான்யம் ரூபாய் 14,700- வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் வட்டம் செங்குணம் பகுதியில் விவசாயிகளுக்கு தரமான விதை வினியோகம் செய்யும் பொருட்டு விதைப்பெருக்குத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைப்பண்ணையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து பயிர் செய்துள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.25 வீதம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 248 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல்விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 223 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரகு 3.94 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களான உளுந்து மற்றும் துவரை 23.11 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 20.1 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை 17.55 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 13.79 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், விநியோகம் செய்ய நெல் 39.86, வரகு 3.94, உளுந்து 4.50, துவரை 1.15 மற்றும் நிலக்கடலை 7.12 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதுடன், விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார்.

இப்பயணத்தின்போது ஆலத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் ராஜசேகரன்(ஆலத்தூர்), கீதா(பெரம்பலூர்), வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago