வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      அரசியல்
TKS Elangovan(N)

சென்னை  - தி.மு.க மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.  இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''திமுக போட்ட பொய் வழக்கின் காரணமாக நான் சிறையில் இருக்கிறேன் என்கிறார் வைகோ. திமுகவின் வழக்கால்தான் தான் சிறையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வைகோ முயற்சிக்கிறார். வைகோ மனக் குழப்பத்தில் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது'' என்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதில் மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டு, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், திமுக மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: