முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுப் பொருட்களிலிருந்து சிற்பங்கள் செய்யும் பணி ஆணையாளர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      மதுரை
Image Unavailable

மதுரை. மதுரை மாநகராட்சி செல்லூர் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களின் இரும்பு கழிவுப் பொருட்களிலிருந்து சிற்பங்கள் செய்யும் பணியினை ஆணையாளர் .சந்தீப் நந்தூரி,   பார்வையிட்டு பேசும்போது தெரிவித்ததாவது :
மதுரை மாநகராட்சியில் குடிநீர் வாகனங்கள், குப்பை அள்ளும் வாகனங்கள் உள்ளிட்ட இதர வாகனங்களில் இருந்து கழற்றப்பட்ட பழைய உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு கழிவுப் பொருட்கள் அதிகமான அளவில் மாநகராட்சி வாகன காப்பகத்தில் சேகரிக்கப்பட்டு இருந்தது. இப்பொருட்களை உபயோகமான முறையில் பயன்படுத்தும் வகையில் இரும்பு கழிவுப்பொருட்களில் இருந்து சிற்பங்கள் செய்ய தீர்மானிக்கப்பட்டு சுமார் 16 டன் இரும்பு கழிவுகளிலிருந்து சிற்பங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான இரும்பு கழிவுகள் மாநகராட்சியில் பயன்படுத்தும் வாகன கழிவுகளில் இருந்து செய்யப்பட்டுள்ளது.
 மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக வாகன கழிவுப்பொருட்களில் இருந்து சிற்பங்கள் செய்து கழிவுப்பொருள் சிற்பங்கள் பூங்கா (யுரவழஅழடிடைந ளுஉரடிவரசந Pயசம) உருவாக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 5 நாட்களாக மாநகராட்சி செல்லூர் வாகன காப்பகத்தில் சிற்பங்கள் வடிவமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சிற்பக்கலை தெரிந்த தொழில் வல்லுனர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரு.சீனிவாசராவ் அவர்கள் தலைமையில் 15 நபர்கள் கொண்ட குழு வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களாகவும் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு உதவியாக மதுரை மாவட்டத்தை சார்ந்த 15 தனியார் வெல்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மதுரை மாவட்டத்தின் கலாச்சாரத்தை மையமாக கொண்டு ஜல்லிக்கட்டு காளை சிலை, காந்தி சிலை, மீன் சிலை, சேவல் சிலை, ஆந்தை சிலை, ஒட்டகசிவிங்கி சிலை, மான் சிலை, தாய்சேய் சிலை, ரோபோ சிலை, இருசக்கர வாகன சிலை உள்ளிட்ட 15 சிற்பங்கள் வடிவமைத்துள்ளனர். இந்த பணிகள் முடிந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஒரு பூங்கா தேர்வு செய்யப்பட்டு இந்த சிற்பங்கள் அனைத்தும் அங்கு நிறுவப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த கலாச்சார சிற்ப பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
இந்தியாவில் விஜயவாடா, குண்டுர், திருப்பதி உள்ளிட்ட சில நகரங்களில் ஏற்கனவே இதுபோன்ற பூங்கா நிறுவப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகமான அளவில் கூடும் பூங்காவில் இந்த சிற்பங்கள் வைக்கப்பட்டு கழிவுப்பொருட்கள் சிற்பங்கள் பூங்கா தனியாக நிறுவப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர்  மதுரம், உதவிப் பொறியாளர் (வாகனம்) திரு.அமர்தீப், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல் உதவிப்பொறியாளர்  .சாலமன் உட்பட சிற்பகலைஞர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago