முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் கால்பந்து போட்டி: 2-0 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      விளையாட்டு
Image Unavailable

அரிஜோ : ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து போட்டிக்கு தங்களை தயார்படுத்தும் வகையில் இந்திய இளம் அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

அதிர்ச்சி

ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து போட்டிக்கு தங்களை தயார்படுத்தும் வகையில் இந்திய இளம் அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் அரிஜோ நகரில் நடந்த நட்புறவு ஆட்டத்தில் முன்னணி அணியான இத்தாலியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்திய அணியில் அபிஜித் சர்கார் (31-வது நிமிடம்), ராகுல் பிரவீன் (80-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

வாழ்த்து

முதல்முறையாக இத்தாலியை வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய அணிக்கு, இந்திய கால்பந்து சம்மேளனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக், இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரும் இந்திய அணியை பாராட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்