முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது: கலெக்டர் சி.அ.ராமன், தகவல்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் சி.அ.ராமன், திடீர் ஆய்வு மேற்கொண்டு விற்பனை மையத்தின் செயல்பாடுகள் குறித்து விற்பனை மைய செயலாளர் சங்கர்சுப்பிரமணி கேட்டறிந்தார்.

 

 

கலெக்டர் ஆய்வு

 

 

வேலூர் வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த விவசாயிகள் மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களிலுருந்தும் விவசாயிகள் பருவத்திற்க்கேற்ப தாங்கள் விளைவித்த நெல், சோளம். கேழ்வரகு, கம்பு, வேர்கடலை, கொப்பறை தேங்காய், துவரை, எள், மற்றும் பருத்து போன்ற வேளாண்; பொருட்களை விற்பனைக்காக இம்மையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். இந்த வேளாண் பொருட்களுக்கு அவற்றின் தரத்திற்கு ஏற்ப தரம் மதிப்பீடு அட்டைகள் வைக்கப்படுகிறது. இவற்றிற்கு இணையதளம் வழியாக தரத்திற்க்கேற்ப விலை ஆன்லைனில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் இடைத்தரகர்களின் குறுக்கீடு தவிர்க்கபட்டுள்ளது. மேலும் விவசாய பொருட்களுக்கு அன்று மாலைக்குள் பணம் உடனடியாக வழங்கப்படுகிறது.

மேலும் பொருட்களுக்கு தாங்கள் நினைத்த விலையை விட அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். சில நேரங்களில் விவசாயிகள் தங்கள் நினைத்த விலை கிடைவில்லை என்றால் அப்பொருட்களை விலை கிடைக்கும் நாள்வரை அதாவது மூன்று மாதம் வரை கிடங்குகளிலேயே எந்த ஒரு கட்டணமூம் இன்றி வைத்துகொள்ளவும் அரசு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. மேலும் வரும் 1.7.2017 முதல் ஆன்லைன் மூலமாகவே பொருட்களுக்கான தொகை விவசாயிகளின்; வங்கி கணக்குகளில் செலுத்தும் முறை செயல்படுத்தப்படும். வேலூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் விவசாய பொருட்களை வாங்க 350க்கும் மேற்பட்ட வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் கணிசமான அளவு வணிகர்கள் நாள்தோரும் கலந்துக்கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

பின்னர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தர மதிப்பீடு வழங்கப்பட்டு மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ள நெல், கேழ்வரகு, கொப்பறை தேங்காய், சோளம் மற்றும் சோளம் பொருட்களை பார்வையிட்டு அவற்றின் விலை மற்றும் தரம் குறித்தும், கணினி மூலம் விலைபட்டியல் நிர்ணயம் செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளிடம் விலை பட்டியல் குறித்து கேட்டறிந்து விலை தங்களுக்கு திருப்திகரமாக உள்ளதா என்றும் கலெக்டர் சி.அ.ராமன்.. விணவினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து