முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் சோணாநதி தூர்வாரும் பணி: ஆட்சியர், மாவட்ட நீதிபதி பங்கேற்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்குட்பட்ட சோணாநதி புண்ணிய குளம் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது

தூர்வாரும் பணி

இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட நீதிபதி மகிலேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்குட்பட்ட கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சோணாநதி புண்ணிய குளம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ. 61.10 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட நீதிபதி மகிலேந்தி ஆகியோர் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்து தொழிலாளர்களுடன் 3 மணிநேரம் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தூர்வாரும் பணி மதியம் 1 மணிவரை நடைபெற்றது. இந்த குளம் தூர்வாரும் பணியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.புருஷோத்தமன், தனி அலுவலர் பெ.அமாவாசை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்குமார், எஸ்.இனியன், ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.தருமராஜ், ஊராட்சி செயலர்கள் கே.முருகன், ராஜ்குமார், மனோகரன், எஸ்.வி.முருகன் ஆகியோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து