முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கம் பெருமாள் கோயில் தேர்திருவிழா

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள்கோவில் 10நாள் மகா கருடசேவை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவில் 5ஆம் நாள் மகா கருடசேவை விழா நடைபெற்றது

தேர்திருவிழா

அன்று காலை 6மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் 100அடி உயர ராஜகோபுர வழியாக எழுந்தருளிய போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அன்றே பகல் முழுக்க சாமி போளுர் ரோட்டில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழாவினை செங்கம் வட்ட வன்னியர் சமூகத்தினர் உபயம் செய்து நடத்தினர் விழாவின் ஏழாவது நாளன்று தேர்திருவிழா நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கும் உட்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது பின்னர் அலங்கரிக்கப்பட்ட 30அடி உயர மரத்தேரில் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் ருக்மணி சத்தியபாமி சமேதரராக எழுந்தருளி பவனிவந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். சிறப்பு வானவேடிக்கை மலர் அலங்காரம் மேளவாத்தியம் நாள் முழுக்க அன்னதானம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். முன்னதாக மாடவீதியில் வெயிலின் தாக்கம் தெரியாமிலிருக்க தண்ணீர் டேங்குகளில் கொண்டுவந்து ஊற்றப்பட்டது.சுவாமியின் அலங்கார தேரில் ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். செங்கம் வட்ட பண்டரெட்டியார் திருத்தேர் அரக்கட்டளையினர் விழா உபயம் செய்து நடத்தினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து