முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கம், பேரிடர் நேரங்களில் பொதுமக்கள் எவ்வாறு துரிதமாக காப்பாற்றுவது, அலுவலர்களுக்கு செயல்விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நிலநடுக்க பேரிடர் நேரங்களில் பொதுமக்களை எவ்வாறு துரிதமாக காப்பாற்றுவது, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டுமென அரசின் அனைத்துத் துறை அலுவலகளுக்கான செயல்விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடத்தப்பட்டது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு, தமிழ்நாடு தீயணைப்புத் துறை, அவசர கால 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் இணைந்து நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்து இந்த செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செயல்முறை மூலம் விளக்கினார்கள்.

நிலநடுக்கம்

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டம் நிலநடுக்கம் ஏற்படும் சூழல் குறைவான நிலையே என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. எனினும் வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படும் போது அங்குள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த பயிற்சியை நடத்த அறிவுறித்தியன் பெயரில் இங்கு செயல்விளக்கம் நடைபெறுகிறது. பூகம்பம் ஏற்படும் காலத்தில் கட்டிடங்களுக்குக்கிடையே சிக்கிக்கொள்ளும் பொதுமக்களை மீட்க செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படும். விபத்து நேரங்களில் முதலில் பூகம்ப அவசர உதவி தொலைபேசி எண் 1077ஐ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க வேண்டும். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செயல்விளக்க நேரத்திற்கும் நேரடி விபத்து நேரத்திற்கும் மக்களை காப்பாற்றுவது சிறிய வேறுபாடுகள் இருக்கும். இருந்த போதிலும் அலுவலர்கள் எவ்வாறு தங்களை தாங்களே தயார்படுத்திக் கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முறையாக தெரிந்து கொள்ள இந்த செயல்விளக்க பயிற்சி முகாம் உதவியாக இருக்கும். எனவே அனைத்துத் துறை அலுவலர்களும் இவற்றை சரியாக கற்றுக்கொண்டு பேரிடர் காலங்களில் பயன்படுத்திட பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சி.அ.ராமன், பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செங்கோட்டையன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன், பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் சங்கரன், கோட்டப்பொறியாளர் செந்தில், வி.ஐ.டி. கல்லூரி பேராசிரியர் முனைவர்.கணபதி, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) முரளி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும்; பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து