முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு அட்மிஷனுக்கான புதிய ஆப்ஸ் அறிமுகம்: துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் தகவல்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைகழக்கத்தில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான பல்வேறு தகவல்கள் அடங்கியபுதிய ஆப்ஸ் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ்சை கூகள் பிளேஸ்டோர் மற்றும் அமேசான் ஆப்ஸ்டோர் மூலம் இறக்கம் செய்து கொள்ளலாம் என்று விஐடி துணைவேந்தர் டாக்டர் ஏ.சாமுவேல் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் கூறியுள்ளதாவது:

மாணவர் சேர்க்கை

விஐடி பல்கலைக்கழகத்தின் சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் விஐடியில் மாணவர் சேர்க்கைக்கான புதிய ஆப்ஸினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் மாணவர் பற்றிய சுயவிவரம், தேர்வில் பெற்ற தகுதி, ரேங்கிங் விவரம், கவுன்சிலிங் விவரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் அதிலுள்ள அட்மிஷனுக்கான செலக்ஷன் கடிதம் மற்றும் செலுத்தி கட்டணத்திற்கான ரசிது ஆகியவற்றை எந்த பகுதியிலிருந்தும் இறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த வசதியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் அமேசான் ஆப்ஸ்டோரிலிருந்து மாணவர்கள் இறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஐடி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் நேற்று தொடங்கியது.

விஐடி வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம் மற்றும் போபால் வளாகங்களில் உள்ள இப்பட்டபடிப்புக்கான 775 இடங்களில் சேருவதற்கு 2840 மாணவர்கள்விண்ணப்பித்திருந்தனர்.அதில்தகுதியுடைய 1640 பேர் அட்மிஷனுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இன்று நடைபெற்ற கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விஐடி சென்னை வளாக துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் அட்மிஷன் ஆர்டர்களை வழங்கினார். இதில் விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்த் ஏ.சாமுவேல் இணைதுணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், இயக்குநர் அட்மிஷன் முனைவர் கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து