முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுக விழா

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலையில் இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் 2017 லோகோ அறிமுக விழா நேற்று நடைபெற்றது திருவண்ணாமலை வேட்டவலம் சாலை யில் உள்ள (காந்திநகர் பைபாஸ் ) விஜயா மஹால் கூட்ட அரங்கில் இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுக விழா நடைபெற்றது வரும் ஜூலை 23ந் தேதி 5 ஆயிரம் இளைஞர்கள், மாணவர்கள் பங்குபெறும் பசுமை மாரத்தான் நடைபெற இருக்கிறது

அறிமுக விழா

தி.மலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பிருந்து 8 கி.மீ. தூரம் இளம்தளிர் இயக்கத்தின் சார்பில் பசுமை மாரத்தான் போட்டி தொடங்கி காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்கம் ரோடு வழியாக அபாய மண்டபத்தை சென்றடைகிறது திருவண்ணாமலை நகரம் முழுவதும் பசுமையாக்கும் முயற்சியில் 11 வாரமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்களை நட்டு வருகின்ற இளம்தளிர் இயக்கத்தினர். இதையட்டி நேற்று இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் 2017 லோகோவினை ஏ.எஸ்.மோட்டார்ஸ் உரிமையாளர் சீனுவாசன் அறிமுகம் செய்து வைத்தார்

இதில் இளம்தளிர் இயக்க தலைவர் ஆர்.டி.பிரகாஷ், செயற்பாட்டளர்கள் விஜய் , லிங்காபாய், கோபி, ஸ்டாலின் சந்தோஷ் மற்றும் ஆசிரியர் வேலாயுதம் உள்ளிட்ட இளம்தளிர் இயக்கத்தினர் மற்றும் ஏஎஸ் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி, கல்லூரி, உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து