முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

அரக்கோணம் கடற்படை லயன்ஸ் சங்கத்தின் 2017-18 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டதுடன், புதிய உறுப்பினர்கள் பலரும் இணைந்தனர்;. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில், பல்வேறு சமூக பணிகளில் பல சங்கங்கள், இயக்கங்கள் செயல்பட்டு வரும் வேளையில் லயன்ஸ் சங்கம் மூன்று அணிகளாக இந்நகரில் செயல்பட்டு வருகிறது.

புதிய நிர்வாகிகள்

அந்த வரிசையில் செம்மையாக மக்கள் பணியாற்றும் சங்கமாக அரக்கோணம் இந்திய கடற்படை லயன்ஸ் சங்கம் செயல்பட்டு வருகிறது என்;று சொன்னால் அது மிகையாகாது. இந்த சங்கத்தின் 2017-18 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நேற்று விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் ஆளுநர் மதனகோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி தலைவராக பழனிவேல், செயலாளராக ஜெகதீசன் மற்றும் பொருளாளராக ஜி.எம்.மூர்த்தி ஆகியோர் பதவி பிராமானம் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக விழாவிற்கு தலைவர் தாதோதரன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் டிஆர்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார் ஹாரூன்ரஷீத் வரவேற்று பேசினார். முதல் துணை ஆளுநர் நந்தகோபால் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆர் அரிதாஸ் சங்க சேவை திட்டங்களை பொதுமக்கள் பலருக்கு வழங்கி, புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் பேசினார்.

இந்த விழாவில் முக்கிய விருந்தினர்களாக ரோட்டரி சங்க தலைவர் கேபிகே.பிரபாகன், அடுத்தாண்டின் தலைவர் பி.இளங்கோ, அரக்கோணம் டைம்ஸ் சீனிவாசன், முன்னாள் தலைவர் ஜி.மணி, செய்யுர் வங்கி துணை தலைவர் ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் செயலாளர் சுரேஷ்குமார்; இறுதியில் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து