முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்தது இறப்பதற்கல்ல… சாதிப்பதற்கே…!

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

விருதுநகரில், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு   தொடர்பான அனைத்துப் பாடங்களையும்  ழுநெ ஆயn யுசஅல-யாக ஒருவரே பயிற்சியளித்து, இது வரை 3500க்கு மேற்பட்ட மாணவ, மாணவியரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசுப் பணியில் அமர வைத்துள்ளார் ஒருவர்.

இது பற்றி அவர் கூறும்போது, தான் செய்ததை “சாதனை” என்ற கோணத்தில் பார்க்கவில்லை, மாறாக வெற்றி பெற்றவர்கள் தங்களது வாழ்வில் அடையும் உயர்வைக் கண்டு, உளமாறப் பூரித்து, மகிழ்வும், நெகிழ்வும் அடைவதாகக் கூறுகிறார். மேலும், இப்பயிற்சி வகுப்பினை ஆரம்பத்தில் ஆரம்பிக்க, இந்நூலின் ஆசிரியர் தன்னம்பிக்கை   நாகராஜன் அவர்களின் பங்களிப்பையும் மகிழ்வுடன் நினைவு கூறுகிறார்அவர்

அவர் பெயர் க.மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மிகுந்த வறுமைக் குடும்பத்தில் பிறந்து, கல்வியை உயிர் மூச்சாக சுவாசித்து, அதன் பலனாக, இன்று விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தாராகப் பணியாற்றி வருகிறார்.
இதோ இவரது செயல்பாடுகளில் சில: இவர் அளிக்கும் இப்பயிற்சிக்கு, பயிற்ச்சிக்கான கட்டணம் வசூலிப்பதில்லை. போட்டித் தேர்வில்  வெற்றி பெற்றோர், சென்னை சென்று, கவுன்சிலிங்கில் கலந்து, அரசு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டரை வாங்கி வர, போக்குவரத்து செலவுக்கு பணமும் கொடுப்பார் வறுமைப்பட்டவர்களுக்கு. 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த பத்தாண்டுகளாக மாணவ, மாணவியருக்கு, வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் பயிற்சி நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளை கடந்த பத்தாண்டுகளாக, இவர் அனுபவிக்கவில்லை. தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். தமிழகத்திலேயே அதிகமானவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

15 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் இருந்து வந்து, இவரிடம் பயிற்சி பெறுகின்றனர்.  அனைத்தப்பாடங்களையும் இவர் ஒருவரே நடத்துவது சிறப்பம்சமில்லை, அனைத்துப் பாடங்களையும் ருpனயவநன ஆன கையில் எந்தக் குறிப்போ, பாடப்புத்தகமோ, நோட்டோ ஏதுமின்றி, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை உற்சாகமாக நடத்துவது தான் சிறப்பம்சம்.

நேரம் ஆக … ஆக… எல்லோரும் உடல் சோர்வில் … மனச்சோர்வில் களைத்து விடுவார்கள். ஆனால், இவரோ நேரம் செல்ல … செல்ல… அதிக உற்சாகத்துடன் செயல்பட்டு, மாணவர்கள் அனைவரையும் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் வைத் ்பார். கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில், மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்களை உயர்த்துவதே இவரது வாழ்வின் இலட்சியம்….

இப்பயணத்தின் …. சில துளிகளாக….

1. விருதுநகரில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில்  ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இராமமூர்த்தி என்பவர், இன்று இவரிடம் பயிற்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக (ஏயுழு) உள்ளார்.

2. மில்லில் கூலி வேலை பார்த்தவர், சித்தாளாக இருந்தவர், பல சரக்குக் கடையில் பட்டாசுக் கடையில் இருந்தவர் என பல்வேறு கடைநிலைப் பணிகளில் இருந்தவர்கள் இன்று அரசு ஊழியராகஃ அரசு அலுவலராக உள்ளனர்.

வகுப்பு தொடங்கியவுடன் இவர் பாடம் நடத்துவதில்லை முதலில் “ நான் சாதிக்கப் பிறந்தவன்” என்று தொடங்கும் உறுதி மொழியை மிகுந்த உறுதியுடன் இவர் கூற… கூற ….மாணவர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

 அதன் பின்னர், “தன்னம்பிக்கை நேரம்” ஆரம்பமாகிறது. வாரந்தோறும் ஒரு தலைப்பில், ஈர்க்கும் விதத்தில், கண்ணீர் மல்க உரையாற்றி “நாம் இந்த உலகத்தில் சாதனை செய்ய பிறந் ்கிறோம்” என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதைத் தொடர்ந்து பாடம் நடத்தும் போது, மாணவர்கள் கவனச் சிதறல் இன்றிப் படிக்கின்றனர்.

வாரம் தோறும் நடத்தப்படும் தேர்வுகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வாரந்தோறும் பணப்பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துகிறார். இவரிடம் படித்த மாணவர்களில், சென்ற புசழரி-ஐஏ (2016) தேர்வில், மாநிலத்திலேயே 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காரியாபட்டியைச் சேர்ந்த, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற மாணவி.

இவர் தினத்தந்தியில் “என் கனவு அரசு வேலை” என்ற தலைப்பில் கடந்த ஓராண்டாக, மாணவர்கள் மிகவும் பயனுறும் வகையில் பாடம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். மலையாள மனோரமா இயர்புக்-2017-ல், இவர் “நிச்சயம் ஜெயிக்கலாம் நீங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

இவர் பள்ளிகளுக்கு சென்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தன்னம்பிக்கை உரையாற்றி ஊக்கப்படுத்துகிறார். மேலும், கல்லூரிகளுக்கு சென்று எதிர்கால வேலை வாய்ப்புக்கள் குறித்து, மாணவர்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், அவரது பிறந்த தினமான ஜீலை -15-ல் (2016) இவருக்கு காமராஜ் பவன் டிரஸ்ட் சார்பாக, “வாழும் காமராசர் விருது” என்ற விருது அளித்து, கவுரப்படுத்தியுள்ளனர். வாழ்க்கையில் முன்னேற விரும்புவோர்,   “ கல்வி + விடாமுயற்சி – விஸ்வரூப் வெற்றி  என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு முயன்றால், “முயன்றால் முடியாதது ஏதுமில்லை”  என்பதை மனப்பூர்வமாக உணரலாம் என்றார்.

இவரது செயல்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து