முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை குரைக்க ஆப்பிள் உதவுகிறது

திங்கட்கிழமை, 10 ஜூலை 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

ஆப்பிள் - குளிர்பிரதேச பழம், உலகில் 7,500 வகையான ஆப்பிள்கள் பயிரிடப்படுகின்றன.  நன்கு பழுத்த பழம் சிவப்பாகவும், இளம்பச்சை அல்லது மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.  ஆப்பிள் பழம் உலகில் அனைத்து குளிர்பிரதேசங்களிலும் வளர்க்கப்படுகின்றது.  ஆப்பிள் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் கோடைகாலங்களில் அதிகம் உட்கொள்ளளாம். 

ஆப்பிள் பழத்தில் மாலிக் அமிலம் உள்ளதால் குடல்பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்வதோடு, மலச்சிக்கலை நீக்குகிறது.  ஆப்பிளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், புரோட்டீன்கள் அதிக அளவு அடங்கியுள்ளதால், உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலை தாக்காத வகையில் நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவுகிறது. 

ஆப்பிள் சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளவும், உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது. ஆப்பிள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.  ஆப்பிளில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது,

அவை உடலை கட்டழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது, மேலும் இதிலுள்ள பாலிஃபீனால், உடல் எடையை குறைக்கச் செய்கிறது.  உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.  மேலும் பெருங்குடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கும். ஆப்பிளில் உள்ள கியூயர்சிடின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. 

அதேபோல் மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளைச்செல்களை அழித்து உண்டாக்கும், பார்க்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.  மேலும் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.  அதோடு கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளதால் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14 சதவிகித அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.  இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.  ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது, உடலில் உள்ள செல்கள் அழிவதைத் தடுத்து சருமம் பொழிவோடு வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 

ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான ஃபிளேவோனாய்டுகள் மற்றும் ஃபீனோலிக் ஆசிட்டுகள், மூச்சுக்குழாய்களில் இருக்கும் அடைப்புகள் அல்லது அழற்சியை நீக்கி, ஆஸ்துமா ஏற்படுவதைத் தடுக்கும்.  ஆப்பிள் தினமும் சாப்பிட்டு வந்தால் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்னச்செய்வதோடு ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 

ஆப்பிளில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது.  ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.  ஆப்பிளில் இயற்கையாகவே மாலிக் ஆசிட் மற்றும் இதர மென்மைப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இவை பித்தப்பையில் பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்கும். 

ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள ஃபிளேவோனாய்டான ஃபிளோரிட்ஜின் இருப்பதால், அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஏற்படுவதை தடுத்து, எலும்புகளை வலுவடையச்செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஆகவே பெண்கள் ஆப்பிளை அதிகம் சாப்பிடலாம். 

ஆப்பிளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தின் போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்.  தினமும் இரண்டு அல்லது மூன்று ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை நோயை சரிசெய்துவிடலாம்.  இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்ததின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து