முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜர் புகழ் பரப்பும் பிரச்சார வாகன பயணம்: ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      அரசியல்
Image Unavailable

சென்னை,  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி நேற்று தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் காமராஜரின் புகழ் பரப்பும் பிரச்சார வாகனத்தை, அதன் தலைவர் ஜி.கே.வாசன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது, " வருகிற 15-ம் தேதி காமராஜரின் 115-வது பிறந்த நாள். அதனையொட்டி தமிழகம் முழுவதும் நகரம், கிராமம், வட்டம் என அனைத்து பகுதிகளிலும் த.மா.கா. சார்பில் விழா எடுத்து கொண்டாடப்படும்.

சென்னையில் மயிலை மாங்கொல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காமராஜரின் புகழ் பரப்ப செய்யும் வகையில் பிரச்சார வாகனங்கள் காமராஜரின் சாதனைகளை விளக்கி சென்னை முழுவதும் சுற்றி வரும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி, பட்டாசு, தீப்பெட்டி, உணவு பண்டங்களின் விலை ஏறியுள்ளன. தொழில்கள் நலிவடைந்துள்ளன. வணிகர்கள் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய தேர்வு முறை ஏற்புடையதல்ல. நடைமுறை சிக்கல் உள்ளதால் பழைய முறையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து