முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரசில் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆந்திர தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரசில் பதவி பறிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் பணிக்கு நியமித்து டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காங்கிரசில் சமீபத்தில் புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் பலர் மாற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளங்கோவன் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். டெல்லி மேலிடத்திலும் புகார் செய்தனர். இந்த நிலையில் பதவி பறிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு டெல்லி மேலிடம் பொறுப்பு வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறு மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த பணிகளுக்கு தமிழக காங்கிரசில் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளை நியமித்து டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், திருச்சி ஜெரோம், ஆரோக்கியராஜ், விழுப்புரம் குலாம் முகைதீன், திருவள்ளூர் பாலமுருகன், விருதுநகர் கணேசன், கன்னியா குமரி அசோகன் சாலமன் ஆகியோர் ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் பேங்க் சுப்பிரமணியன், புதுவை மாநில பொறுப்பாளராகவும், திருவண்ணாமலை வசுந்த ராஜ், அந்தமான் மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து