முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபு தேவா படத்திற்கு அம்ரீஷ் இசையில் சங்கர்மகாதேவன் பாட்டு

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா), கும்கி அஸ்வின், மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் இடம் பெறும் பாடலான

"அய்யனாரா வந்துட்டாங்க
இங்க பாரு
காவல் தெய்வமா
மூணு பேரு"

இந்த பாடலை பிரபுதேவா முதன் முறையாக எழுதி இருக்கிறார்..இந்த பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர்மகாதேவன் பாட சமீபத்தில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது.

பாடலை பாடி முடித்த சங்கர்மகாதேவன் உடனடியாக பிரபுதேவாவுக்கு போன் செய்தார்..சூப்பர் ஹிட்டாகக் கூடிய இந்த பாடலை நீங்க எழுதி இருக்கீங்கன்னு அம்ரீஷ் சொன்னார்..இந்த பாட்டு நிச்சயம் எல்லா இடத்திலும் ஒலிக்கும்..வாழ்த்துக்கள் என்று பிரபு தேவாவை வாழ்த்தியதோடு இல்லாமல் இசை அமைப்பாளர் அம்ரீஷையும் பாராட்டினார். முடிவடையும் கட்டத்தில் உள்ளது எங் மங் சங் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து