Parents-with-Student

Source: provided

ஒரு அறிஞர் சொன்னார்: “நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்குக் கிடைக்கும் இனிய பழத்தைப் போலத்தான். அது கெட்டுப் போவ தற்கு முன் அதைப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பழம் அழுகிப் போய்விடும்; பயன் தராது. இன்றைய தினத்தை நாளைக்கோ, நாளை மறுநாளோ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. நாளை மறுநாள் நீங்கள் செய்யும் வேலை, நாளை மறுநாள் நீங்கள் செய்யக்கூடிய வேலைதானே தவிர, இன்றைக்குச் செய்யக்கூடிய வேலை அல்ல.

இன்றைய தினமான தேதி, மாதம் - வருடம் இனி மீண்டும் வராது. இன்று கிடைப்பன இன்றே, உடனே மதிப்பிட்டு ஏற்கும் உறுதியும், மனப்பான்மையும் நமக்கு இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான். வாழையின் இலை, மட்டை, தண்டு, பூ, காய், கனி, சருகு அத்தனையும் மனிதன் பயன்படுத்திக் கொள் வதைப் போல், ஒரு நாளில் காலை, பகல், மாலை, இரவு ஒவ்வொரு பொழுது அதன் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான் பெரு மைக்குரிய மனிதர்களாக வாழ்கிறார்கள்.

வாழ்வில் வெற்றிபெற்ற மனிதர் – தோல்வி பிடித்த மனிதர் என்று தனித்தனி யாக ஒன்றும் கிடையாது. தோல்வியுற்ற – சாதாரண மனிதர்கள் என்போர் யார்? கவனித்துப் பாருங்கள். தங்கள் வாழ்வின் பெரும்பகுதி நாட்களை வீணே கழிப்பவர்கள் தான்.

ஏன், வீணே கழிக்கிறார்கள்? அவர்களுக்கென்று ஒரு லட்சியம் இல்லை. பிறருடன் வீண் பேச்சு பேசிக் கழிப்பவர்கள், குடித்துக் கழிப்பவர்கள், ஊர் சுற்றிக் கழிப்பவர்கள் என்று பலரகம் உண்டு. என்றாலும், இவர்களின் ‘செயல்’ என்று ஒன்றும் இருக்காது. வாழ்க்கையில் துயரமானவை சம்பவங்கள், இன்பமானவை சந்தர்ப்பங்கள்.

எனவே சந்தர்ப்பம் என்பது எல்லோருக்கும் எப்போதும் வராது; வரும் போது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; நழுவவிடக்கூடாது. நழுவவிட் டால், அதே சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் அடுத்த மனிதன் அதைக் கொத்திக் கொண்டு போய் விடுவான்.

காக்கையைப் பாட்டுப் பாடச் சொல்லி, அதன் வாயில் இருந்த வடையை நழுவி விழச் செய்து, தூக்கிக் கொண்டு ஓடிவிட்ட நரியின் கதையைப் படித்திருக் கிறீர்கள் அல்லவா?
 அதுபோல் நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம் என்கிற வடையை, தான் பறித்துக் கொண்டு ஓட நம் பின்னே நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.

இது போட்டி உலகம். ‘தகுதியுள்ளவன் வெற்றியடைவான்’ என்கிற அமைதி உலகம் மாறி, ‘வெற்றி யடைபவனே தகுதி உள்ளவன்’ என்று சமூகத்தின் பார்வை மாறிப் போய்விட்ட அவசர உலகம்.

பெரும்பாலான வாய்ப்புகள் வாழ்வில் ஒருமுறை தான் வரும். அப்படி வரும் போது, அதில் கூடவே சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து கொண்டு ஏற்க மறுத்துவிட்டால், வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது.

பொதுவாக விளையாட்டில் இதை நாம் எளிதாகப் பார்க்கிறோம். ஒரு நிலை யில் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க வேண்டியவர், கொஞ்சம் மெத்தனமாக இருந்து விடுவார். எதிராளி அடிமேல் அடி கொடுத்து வெற்றியைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார். கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு நல்ல ‘பேட்ஸ்மேன்’ ஒரு முறை அவரது பந்தை ‘காட்ச்’ பிடிக்க வாய்ப்பு கொடுப்பார். அதைக் கோட்டை விட்டு விட்டால், ‘செஞ்சுரி’ வரையில் போய்விடுவார். ஆட்டத்தின் முடிவே திசை மாறிப் போய்விடும்.

சிலபேர் தங்கள் கடந்த கால வாழ்வைப் பற்றி கூறி, “அன்றைக்கு அந்த வேலையில் சேர்ந்திருந்தால் இன்றைக்குக் கவலை இல்லாமல் இருந்திருப்பேன்; அன்றைக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தால் இன்றைக்கு மாம னார் வீட்டு ஆதரவில் எவ்வளவோ நன்றாக இருப்பேன். அந்தப் பெண்ணின் சகோ தரர்கள் கோடீஸ்வரர்கள்” என்று அங்கலாய்ப்பதைக் கேட்கிறோம்.

காரணம் அதேபோல் வாய்ப்பு அடுத்தடுத்து வரும் என்று ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்குக் காரணம் நம்மைப் பற்றி நாமே உயர்வான மதிப்பீடு செய்து வைத்திருக்கும் ஈகோ, இருபத்தைந்து வயதில் நமக்குப் பெண் கொடுக்க ஒரு குடும்பத்தினர் முன் வந்ததற்குக் காரணம் நாம் இருபத்தைந்து வயது இளைஞன் என்கிற காரணத்தால் தான். அந்த வாய்ப்பு நழுவிப் போனதை நினைத்து ஐம்பது வயதில் வருத்தப்பட்டுப் பயன் என்ன?

ஐம்பது வயதில் நமக்கு யாராவது பெண் கொடுப்பார்களா? அதே போல் 35 வயது வரை தான் வீணே கழித்து விட்ட வாழ்நாட்களையும், வீணே செல வழித்துவிட்ட செல்வத்தையும் இப்போது எண்ணி, எண்ணி ஏங்குபவர் எத்தனை பேர்! ‘எனக்கு மீண்டும் இளமை நாட்கள் கிடைத்தால்?...’ என்று ஒவ் வொருவரை யும் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால், அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கமும் ஏக்கப் பெருமூச்சுகளாகவே இருக்கும்.‘சக்தி இருந்தபோது புத்தி இல்லை புத்தி வந்த போது சக்தி இல்லை’ என் பது உலக வழக்கு ‘கெட்ட பின்பு ஞானி’ என்று பாடிப் போனவர்கள் பலபேர்.

பலரது பொறுப்பின்மைக்குக் காரணம் அவர்களது பெற்றோரின் வளர்ப்பு முறை; பெற்றோரின் குணாம்சம்; குடும்பத்தின் வறுமைச் சூழல் போன்ற பலவும் காரணமாக இருக்கின்றன.

பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதாமல் அவர்களை ஏனோ தானோ என்று வளர்ப்பார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏழெட் டுப் பிள்ளைகள் என்பது சகஜம். ‘நாலு பொண்ணு; நாலு பையன்’ என்று எட்டு பிள்ளைகள் கொண்ட குடும்பம் ஏராளம். குடும்பக் கட்டுப்பாடு என்கிற விழிப் புணர்ச்சி நாட்டில் பரவாத நிலை.அதனால் குழந்தைகளுக்கு பசித்த வேளையில் சோறு போடுவதே பெரிய சாதனையாக நினைத்த பெற்றோர்கள் உண்டு.

தவறு செய்த குழந்தையைத் தண்டிக்க ‘அவனுக்கு சோறு போடாதே!’ என்று தாயிடம் சொல்லிவிடுவார் தந்தை. இப்போது ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே கொண்டுள்ள தாய்மார்கள் கணவனை விட பிள்ளைகள் மேல் பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஏழெட்டு பிள்ளை உள்ள வீட்டில் பிள்ளைகளை விட கணவன் மீது பற்று கொண்ட மனைவிகளே அதிகம். அது, ஆணாதிக்க சமுதாயம். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறி தன்னையும் மாய்த்துக் கொண்ட சமூகம்.

அந்த சமூகத்தின் வழிவந்த பெண்கள் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்ற பத்தாம் பசலி கொள்கையைக் கொண்டு, கணவனுக்கு முதலிடத்தையும். குழந்தைகளுக்கு இரண்டாமிடத்தையுமே கொடுத்து வந்தனர்.

அதனால் பிள்ளைகள் பெற்றோரின் அன்பில்லாமலும், பெற்றோர் மீது பிடிப்பு இல்லாமலும் வளர்ந்து, வாலிபப் பருவத்தில் தங்கள் போக்கில் வாழ்க்கையைக் கழிக்கத் தொடங்கிவிட்டனர்.

இப்படிப்பட்டவர்களின் சந்ததியினரும் தங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவரவர் போக்கில் வாழ்நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

‘என் மகன் இந்தப் படிப்பு படிக்கிறான்; மேற்படிப்பு படிக்கிறான்’ என்று அவன் படிப்பையும், மதிப்பெண்ணையும் பார்த்து, தன் மகன் சிறப்பாக வளர்வதாக இன்றைய பெற்றோர் நினைத்து விடுகின்றனர்.

ஆனால் அதன்பின் அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மதுப்பழக்கத்திற்கும், தகாத பெண் சினேகிதத்திற்கும் ஆளாகி அவன் சீரழிந்து வருகிறான் என்பது வெகு நாட்களுக்குப் பிறகே பெற்றோர்க்குத் தெரிய வருகிறது.

இன்னும், ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கும் பல மாணவர்கள், பெற்றோரின் பார்வைக்கு வெகு தூரத்தில் வாழ்வதால் இன்னும் கெட்டுக்போக வாய்ப்பு ஏற்படு கிறது.

உயர்தரமான பள்ளிகள், தங்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை எடுத்துக் கொள்கின்றன. அடுத்து என்ன படிக்கலாம் என்று வழிகாட்டு கின்றன. இடைநிலை, மற்றும் கடைநிலையில் உள்ள பள்ளிகள் தங்களிடம் படிக் கும் மாணவர்களில் பெரும்பகுதியினர் ‘பாஸ்’ பண்ணிவிட்டாலே போதும், அதன் பிறகு அவர்களாச்சு; அவர்கள் எதிர்காலமாச்சு என்று இருந்து விடுகின்றனர்.

எனவே தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டால் போதும்; அவன் பாஸ் பண்ணிவிட்டால் போதும் என்று சராசரி பெற்றோரும் நினைத்து விடுகிறார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவனை எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு படிக்க வைக்க வேண்டும், எந்தத் தொழில் கல்வியில் சேர்ந்தால் அவனுக்கு உடனடி வேலைவாய்ப்பும், அதிக வருவாயும் கிடைக்கும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலை எஸ்.எஸ்.எல்.சி, அல்லது பட்டப்படிப்பு படித்து விட்டு ஏதே னும் அரசு ஊழியராகவோ, தனியார்த்துறை ஊழியராகவோ பணிபுரிகிற ஒருவருக்கு, தற்கால கல்வி முறை, மேற்படிப்பில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன, இதில் எதில் சேர்ந்து படித்தால் தன் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்றெல்லாம் தெரியாது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் உள்ளுரில் இருக்கும் கலைக் கல்லூரியில் பி.ஏ. சரித்திரம் படிக்க வைத்து விடுவார். அந்தப் படிப்பு அவனது எதிர்காலத்திற்கு பயன்படாது. இதெல்லாம் ஒரு காலத்தில் அரசு ஊழியர் வேலைக்கு உரிய படிப்புகளாக இருந்தது உண்மை. இப்போதோ இந்தக் கல்வி முறைக்கு எந்த மதிப்பும் இல்லை.

விஞ்ஞான பாடத்தை விருப்பப்பாடமாக எடுத்து படித்தவர்களுக்குத் தான் எதிர்காலத்தில் தொழில் கல்வியில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
வேதியியல், இயற்பியல், பாடங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களே, ‘டெக்னாலஜி’ (தொழில் நுட்ப) படிப்புகளுக்குரிய கோர்ஸ்களில் சேர்க்கப்படுகின்றனர்.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil ComedyRhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kidsகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Reviewஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து