முக்கிய செய்திகள்

செலவைக் குறைத்து இலாபத்தைப் பெருக்க ஒருங்கிணைந்த பண்ணைய முறை

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      வேளாண் பூமி
velon

Source: provided

சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் உழவியல் துறை முனைவர் மா.விஜயகுமார் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை பற்றி கூறுகையில், வேளாண் பெருமக்கள் பயிர் தொழிலைத் தனித்து மேற்கொண்டு அல்லல் உறுவதைத் தவிர்த்து பல்வேறு வேளாண் சார்புத்தொழில்களான பால்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, சான எரிவாயுக்கலம் அமைத்தல், வேளாண் காடுகள் மற்றும் பழ மரங்கள் வளர்த்தல், தேனீ வளர்த்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல் போன்றவற்றை இணைத்துச் செயல்படும்போது வெளிச்சந்தையில் ஏற்படும் விலைத்தட்டுப்பாட்டை சரிக்கட்டி நிலையான நிகரலாபம் பெற வாய்ப்பேற்படும்.  இதில் ஒரு பிரிவில் கிடைக்கும் கழிவு மற்றும் விளைபொருள்களை பண்ணை அளவிலேயே சுழற்சி செய்வதன் மூலம் மற்றொரு தொழிலுக்கு இடுபொருளாக்கி செலவைக் குறைத்து நிகர இலாபத்தைப் பெருக்கிகொள்ளலாம்.

நன்செய் - பயிர், மீன், கோழி அல்லது புறா அல்லது ஆடு

நன்செய் நிலத்தில் 10 சென்ட் நிலப்பரப்பு உள்ள மீன் குட்டையில் 400 மீன் குஞ்சுகள் (கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை) வளர்க்கலாம்.  மீன்களுக்கு உணவாக மீன் குட்டைகளின் மேல் கோழி மற்றும் புறா வளர்க்கலாம்.  ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் உணவு மற்றும் வாணிபப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும்பொழுது நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.  இத்துடன் கால்நடை தீவனத்திற்காக கம்பு நேப்பியர் புல் மற்றும் வேலிமசால் கலப்புப்பயிராக பயிரிட வேண்டும்.  பயிர், மீன் மற்றும் ஆடு ஒருங்கிணைக்கும்போது கிடைக்கும் எரு மீன்களுக்கு உணவாக இடலாம்.  புpன்னர் மீன்கள் அறுவடை செய்த பின்பு கிடைக்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சுழற்சி செய்வதன் மூலம் மண்வளம் மற்றும் மகசூல் கூடும்.

தோட்டக்கால் - பயிர், கால்நடை, சாணஎரிவாயு, மரம் வளர்ப்பு மற்றும் தேனீ அல்லது காளான் வளர்ப்பு


பருத்தி அல்லது கரும்பில் ஊடுபயிராக பாசிப்பயிரும், சோளத்தில் தட்டைபயிரும் பயிரிடலாம்.  50 சென்ட் நிலப்பரப்பில் ¾ பாகம் தீவனப்பயிரான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அத்துடன் பயருவகை தீவனமான குதிரைமசால் ¼ பாகம் நிலத்திலும் பயிரிடப்படலாம்.  இது கறவைமாடுகளுக்குத் தேவையான பயறுவகை மற்றும் பசுந்தீவனத் தேவையை ஈடுகட்டும்.  கால்நடை கழிவுகளை சிறப்பான சுழற்சி முறையில் பெறப்படும் எரிவாயு, சமையல் மற்றும் மின்சார விளக்குகளுக்கு பய்னபடுத்தப்படலாம்.  இவ்வாறு பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் போது, சாணத்திலுள்ள களை விதைகள் கொல்லப்பட்டு தொழுஉரத்தின் தரம் உயர்த்தப்படுகிறது.  இவற்றை மண்புழு உரமாக்கி நல்ல எருவாக மாற்றப்பட்டு வயல்களுக்கு இமுவதால் மண்ணின் வளம் மேம்படும்.  இதைப் போன்றே காளான் வளர்ப்பை நாளொன்றுக்கு 5 கிலோ என்ற அளவில் உற்பத்தி செய்யும் தொழிலை ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இணைப்பதால் ஆண்டு முழுவதும் நிலையான வருமாணம் பெற ஏதுவாகின்றது.
முயல் வளர்ப்புத் திட்டத்தினையும் தோட்டக்காலுக்கான பண்ணைய முறையில் இணைத்து அதிக பலனைப் பெற முடியும்.  10 பெண் மற்றும் 1 ஆண் முயல் கலப்பின் மூலம் 200 குட்டிகளும், ஆண்டொன்றிற்கு 1000 கிலோ எடையுள்ள இறைச்சியும் பெறலாம்.  தென்னை மரங்களில் வாய்ககாலின் ஓரமாக 4 மீட்டர் இடைவெளியில் நடுவதன் மூலம் ஒரு ஹெக்டர் நிலத்தை சுற்றிலும் 52 மரங்களை வளர்க்கலாம்.  வருடத்திற்கு 5200 காய்களையும் நிகர வருமானமாக ரூ.7800 வரையும் பெறமுடியும்.  வுpவசாயக் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் பழங்கள், கீரைவகைகள் போன்றவை பெறுவதற்கு பண்ணை இல்லத்திற்கு அருகிலுள்ள 200 ச.மீ. பரப்பில் வீட்டுத்தோட்டம் அமைத்து பயன்பெறலாம்.  ஒன்று அல்லது இரண்டு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வீட்டுத் தோட்டத்தில் பொருத்துவதன் மூலம் பூப்பயிர்களான சூரியகாந்தி, தென்னை போன்றவற்றிலிருந்து தேன் சேகரிக்கவும் ஏதுவாகிறது.

மானாவாரி


மானாவாரி நிலங்களில் வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் தரமான தீவன இலைகளை தரத்தக்க மரம் வளர்க்கும் திட்டத்தை இணைத்து செயல்படுவதன் மூலம் நிலையான வருமானம் பெற ஏதுவாகின்றது.  முானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்புத் தொழில்களான ஆடு வளர்ப்பு, எருமை மாடு வளர்ப்பு, புறா வளர்ப்பு, முயல் மற்றும் காடை வளர்ப்பு போன்றவற்றை இணைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும்.  மேலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாமான காட்டு மரங்களை வளர்ப்பதன் மூலம் 8 முதல் 10 ஆண்டுகளில் தரமான மரச்சாமான் செய்ய ஏற்ற மரங்களைப் பெற்று பயன் அடையலாம்.  இதைப்போலவே வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை மானாவாரியில் கிடைக்கும் குறைந்த மழையளவைக் கொண்டே வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம்.

மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் தலைச்சேரி இன ஆடுகளை மானாவாரியில் வளர்க்கும்போது பல்வேறு தீவனங்களை உணவாக எடுத்துக்கொண்டு உடல் எடை கூட வாய்ப்புள்ளது.  தலைச்சேரி இன ஆடுகள் தன் குட்டிகளின் தேவைக்கு மேல் நாளொன்றிற்கு 80 முதல் 100 மி.லி. வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டிருப்பதால் இவ்வினத்தை இரட்டைப் பலன் கொண்ட வகை என்று குறிப்பிடலாம்.  20 பெட்டை ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 45 குட்டிகளை பெற முடியும்.  ஓவ்வொரு குட்டியும் பால் ஊட்ட மறக்கும்போது சராசரியாக 12 கிலோ உயிர் எடை உடையதாகவும், ஆண்nடொன்றிற்கு 540 கிலோ வரை உயிர் எடை தரவ ல்லதாகவும் இருப்பதால் இவற்றிலிருந்து ரூ.43,200 வரல வருமானமாகப் பெறலாம்.

எருமை வளர்ப்புத் திட்டத்தை மானாவாரி வேளாண்மையில் ஒரு அங்கமாக இணைப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.  3 எருமை மாடுகளை 1 எக்டர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் தானியங்களின் தட்டை பயறு வகைக் கழிவுகள் மற்றும் நீண்ட கால புல் வகைகளை மட்டுமே தீவனமாகப் பய்னபடுத்தி வளர்க்க முடியும்.  3 எருமைகளில், 2 எருமைகள் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் கொடுக்கும்படி பராமரிக்க வேண்டும்.  இவ்வாறு பராமரிக்கும் திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொண்றுக்கு 9 லிட்டர் பாலும், ஆண்டுக்கு 3285 லிட்டரும் பெற ஏதுவாகின்றது.

மானாவாரியில் பண்ணைக் குட்டை இணைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.  ஆதிக மழையால் மண் அரிப்பினால் வீணாகும் நீரை குறைக்கவும் பண்ணையின் தாழ்வான பகுதியில் மொத்த சாகுபடிபரப்பில் 1/25 பாகத்தில் பண்ணைக் குட்டை அமைக்கலாம்.  இக்குட்டையில் தேங்கிய மழைநீர் கடைசியாக கிடைத்த மழைக்குப் பிறகு 30 முதல் 40 நாட்கள் வரைக் குட்டையில் தங்கியிருப்பதால் நீண்ட வயது தீவன மற்றும் பழமரங்களும் ஓரிருமுறை நீர் விட பயன்படும்.  இத்துடன், மழை நீரோடு அடித்து வரப்பட்ட சத்தான வண்டல் சேகரிக்கவும் பயன்படுகிறது. நீண்ட பருவ மழை கொண்ட பகுதிகளின் குட்டையில் நீர் இருப்பு
3½ முதல் 4 மாதங்கள் வரை நீடித்திருக்கும்.  இத்தகு நிலையில் “திலோப்பியா” போன்ற மீன் இனத்தை வளர்த்து மீன் இறைச்சியைப் பெறலாம். மேலும் விவரங்கள் பெற சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி 0427 2422550 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

தொகுப்பு:-  முனைவர் மா.விஜயகுமார் (உழவியல்) 
முனைவர் ப.கீதா (திட்ட ஒருங்கிணைப்பாளர்)

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து