முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகப்பாபல்கலைக்கழத்தில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பின் பன்னாட்டுக் கருத்தரங்கம்

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று பல்கலைக்கழக லெ.சித.லெ. பழநியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
 அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள்  இக்கருத்தரங்தைத் துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், தமிழ் பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடக்கமே இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நோக்கமாகும் .மொழி இனத்தின் அடையாளம். ஓர் இனத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தெரிந்து கொள்வதற்கு மொழி அவசியம். அத்தகைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கில் தான் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் தமிழ் பண்பாட்டு காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மோழியை பணம் சம்பாதிக்கும் கருவியாக கருதக்கூடாது. தாய்மொழி ஒரு கருவியல்ல. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்கத் தொடங்கும் போது, அவர்களுக்கு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், விழுமியங்களையும் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள்.  எனவே, பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து இக்கருத்தரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
 சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் திரு. அன்பரசு இராஜேந்திரன், தமது சிறப்புரையில், அழகப்பாபல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அழகப்பர் அருங்காட்சியகமும், பண்பாட்டு காட்சியகமும் மிகச் சிறந்தமரபுடைமை நிலையம் எனப் பாராட்டினார்.  மேலும், நாம் நமது வேர்களை மறந்து விடக்கூடாது.  உலகமயமாதல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது போல நமது வாழ்க்கையும் சுருங்கிவிட்டது.  நாம் நமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பகிர்ந்துக் கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  மொழியை வாழும் மொழியாககற்பிக்கவேண்டும்.  நம் மொழியை இலகுவாகவும்,பயன்படுத்தும்;விதமாகவும் கொண்டு செல்ல வேண்டும்.  தமிழ் மொழியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் செயலை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்றார்.
 சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழிநிலைய பாடத்துறைத் தலைவர் முனைவர் இரா. விமலன் தமது வாழ்த்துரையில், நம் முன்னோர்கள் நமது பண்பாட்டைகாரண காரியத்தோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  ஆதனை உணர்ந்து அவற்றை பின்பற்ற வேண்டும். கணினிசார்ந்த பயணத்தை நாம் மேற்கொண்டால் தான் நாம் நம் மொழியை வளர்க்க முடியும்.  தொழில்நுட்பத்தோடு நாம் நம் மொழியை கைகோர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேனாள் சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர். தங்கம் மூர்த்தி, தமது வாழ்த்துரையில், தமிழ் மொழிபாரம்பரியம்மிக்க மொழி. ஆதை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஒருவருக்கு தாயும், தமிழ் ஆசிரியரும் சிறப்பாக அமைந்து விட்டால், அதுவே அவருக்கு பெரிய வரமாகும். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியை அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் சிறப்பாக செய்து வருகிறது எனபாராட்டினார். 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழின் போக்கு சிறப்பாக அமைந்தால் தான் தமிழ் வளர்ச்சி பெறும் என்றார்.
சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழிநிலைய ஆசிரியர் முனைவர் கோ. சந்தன்ராஜ் மற்றும் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் திரு. சு. நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
 கருத்தரங்க ஆய்வுக்கோவையை திரு. அன்பரசு இராஜேந்திரன் அவர்கள் வெளியிட துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
 முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன், வரவேற்புரையாற்றினார். தமிழ்ப் பண்பாட்டுமைய இயக்குநர் பேரா. சே. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து