முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே முயற்சியும் இருக்காது

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

தோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்? இங்கு நாம் அவர்களின் தோற்றத்தைக் குறிப்பிட முன்வரவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனைபேரின் பேச்சுமுறை – பேசும்பாணி – ஒன்றாகவே இருக்கும்.

உலகம் பொல்லாதது … இங்கு நல்லவனாக வாழ்பவன் ஏமாளி. மானம், ரோஷம் இல்லாதவன் தான் முன்னேற முடியும். நமக்கு அதெல்லாம் தெரியாது. அதனால்தான் வளராமல் அப்படியே இருக்கிறோம். இங்கே, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். நன்மைப்போன்ற அறிவாளிகளுக்கு மதிப்பு ஏது? சுயநலக் கார உலகம், என்றெல்லாம் பிலாக்கண பாணியில் பிரலாபிப்பார்கள்.

இப்படிப் பேசிப்புலம்புவது இவர்களுக்கு மூச்சு விடுவதைப்போல இயல்பான ஒன்று. இப்படி எல்லாம் பேசி, இவர்களின் தாழ்வுநிலைக்கு இவர்களே ஆறுதல் தேடிக்கொள்வார்கள்.

யாராவது ஒருவர் இவரைவிட சற்று தாழ்ந்த நிலையில் உள்ளவர் இவருக் குப் பேசக்கிடைத்துவிட்டால் போதும், உடனே உலக விமர்சனம், சமூக விமர்சனம் தான் இவர்களது பேச்சாக இருக்கும். உலகில், பேசுவதற்கு ஏற்ற பொதுவான பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசினால் எதிராளியும் அவர் பேச்சில் கலந்துகொள்வார். ஆனால் இவரோ, பேசுபவர் தானாகவும் கேட்பவர் எதிராளியாகவும் இருக்க வேண்டும் என்றே விரும்புவார். மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருக்க வேண்டிய அளவிற்கு இவர் அறிவாளி, திறமைசாலி என்றும், ஆனால் இந்த மோசமான சமுதாய சூழலுடன் தன்னால் ஒத்துப்போக முடியாததால் தான், பின் தங்கி விட்டதாகவும் பிதற்றுவார்.

சரி;  இவர் நல்ல அறிவாளிதான்; திறமைசாலிதான் பலராலும் ஒப்புக்கொள் ளப்பட்ட விஷயம் தான். இவர் தன் நோக்கில், லட்சியத்தில் வெற்றி பெறவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதை இன்னொருவரிடம் புலம்பி ஆவப்போவ தென்ன? அதைக் கேட்பவருக்குத்தான் என்ன பயன்? ‘இவர் ஒரு தோல்வியாளர்’ என்று ஏற்கனவே நூறுபேருக்குத் தெரியும் என்றால், இப்போது ஒரு புது மனிதரிடம் தன்னைப்பற்றிப் புலம்பல் அறிமுகம் செய்து கொண்டதால், நூற்றியோராவது நபருக்கும் ‘இவர் ஒரு தோல்வியாளர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டார்; அடையாளம் காட்டிக்கொண்டார்; அவ்வளவுதானே?

ஒவ்வொரு மனிதனும் எல்லாவற்றிலும் வெற்றிபெறவே விரும்புகிறான். சண்டை சச்சரவில் மட்டுமல்ல் சீட்டாட்டத்திலும், விளையாட்டிலும்கூட, எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதும் மனித இயல்பு; எல்லாவற்றையும் அடைய நினைப்பதும் மனித இயல்பு. அதில் அவன் வாழ்க்கைக்கு எது மிக மிக அத்தியாவசியமோ, அல்லது அவன் வாழ்வின் ஒரேஆசை, உச்சபட்ச ஆசை எதுவோ அதற்காக மீதி அனைத் தையும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறான்.

அப்படியிருக்க யார்தான் தோல்வியாளர்களை விரும்புவார்கள்? தங்களைத் தோல்வியாளர்கள் என்று யார் தங்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுகிறார் களோ அவர்களை யாரும் விருப்பத்துடன் நாடி வந்து பழகுவதில்லை.

அப்படியே நாடி வந்தாலும், அந்த தோல்வியாளரால் ஆகக்கூடிய உதவி ஒன்று இருக்கும். அதற்காக நாடிவந்திருப்பார், “உங்களிடம் ஜோசியம் சம்பந்தமான புத்தகம் ஏதாவது இருக்கா?” என்று கேட்டோ, “ரேசன் கார்டு காணாமல் போய் விட்டது. புது ரேசன் கார்டு வாங்க வேண்டும். உங்கள் தம்பி ரேசன் கடையில் வேலை செய்கிறாரே… நீங்கள் அவரிடம் சொல்லி ஏற்பாடு பண்ண முடியுமா?” என்று கேட்கவருவார். அவ்வளவுதான். உங்களால் அவரது காரியம் முடிந்ததும் அதன் பிறகு உங்களை அவர் தேடி வரப்போவதில்லை. ஒருவேளை, உங்களால் ஆகவேண்டிய அடுத்ததொரு உதவி அவருக்கு தேவைப்பட்டால்... வருவார்.

ஆனால் வெற்றி மனப்பான்மை கொண்டவர்களை பலரும் தேடிவருகிறார்கள். இவர் வெற்றிபெறுவார்; அப்போது இவர் நமக்கு உதவிகரமாக இருப்பார் என்கிற நம்பிக்கையில் இவரையே சுற்றிவருவார்கள். இவருக்கு ஆக வேண்டிய காரியங் களை எல்லாம் அவர்கள் ஓடியாடிச் செய்வார்கள். அப்படியே அவர் வெற்றிபெறத் தகுதியற்றவராக இருந்தாலும்கூட, வெற்றி மனப்பான்மையாளர்கள் நடந்ததையும் கடந்ததையும் எண்ணியும் சொல்லியும் புலம்புவதில்லை. வெற்றி இதோ வந்துவிட்டது; அதோ வருகிறது; அவரைப் பார்க்கப்போறேன்; இவர் வரச்சொல்லி யிருக்கிறார்’ என்றெல்லாம் வாய்வீச்சு வீராப்பு பேசிக்கொண்டிருப்பார்கள். அதை நம்பியே பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுபோல, முதலில் சில காலம் இவருக்கு ஊழியம் பார்த்தவர்கள் பிறகு இவர் ஒரு ‘வாய்ச்சொல் வீரர்’ செயலில் ஜீரோ என்று புரிந்துகொண்டு நழுவிவிடுவார்கள். ஆனால் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வேறு ஒருவர் வந்துவிடுவார், ஊழியம் புரிய.

இப்படி ஆள்மாற்றி ஆள் இவர்களை சூழக்காரணம் என்ன? இவர்கள் ஒருபோதும் தங்களைத் தோல்வி மனப்பான்மையாளர்களாகக் காட்டிக் கொள்வ தில்லை.அதனால் இவர்களை விட பலவீனமானவர்கள் இவர்களது தொண்டர்களாக ஆகிவிடுகிறார்கள். பொதுவாக அரசியல் துறையிலும், சென்னையில் சினிமாத் துறையிலும் இப்படிப்பட்ட வாய்வீச்சு பேர்வழிகளையும் அவர்களுக்கு தொண்டரடிப் பொடி ஆழ்வார்களாக பணிபுரிபவர்கள் பலரையும் காணலாம்.

இப்படிப்பட்டவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டீர்கள். சம்பந்தம் இருக்கிறது. காரணம், இவர்கள் தங்கள் சொந்தக் கால் களில் நிற்கவில்லை. மாறாக, வெறொருவர் வெற்றி அடைந்தால் அவர் தோளில் ஏறிப்பயணம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னை உயர்த்திக்கொள்ளச் செய்யும் நெடுநோக்கு உழைப்பு இரண்டும் இல்லை. வெற்றிபெறக்கூடியவர் என்று இவர்கள் யாரை கணித்திருக்கிறார்களோ, அவர்களுக் காக உழைக்கிறார்கள்.

‘எங்கே நம்பிக்கை இல்லையேர் அங்கே முயற்சியும் இருக்காது’ என்பது ஒரு ஆங்கிலப் பொன்மொழி. இது அனுபவ மொழியும் கூட. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தங்கள் செயல்திறன் மீதே நம்பிக்கை யில்லாதவர்களாக இருப்பார்கள். நம்பிக்கையில்லாதவனிடம் ஒரு பொறுப்பை செய்து முடிக்கும் வரையில் தொடர்ந்து செய்து வருவதற்கான ஊக்கம் இருக்காது. அவர்கள், தாங்கள் ஆரம்பித்த பல காரியங்களை இடையிலேயே நிறுத்தி விடுபவர்களாக இருப்பார்கள்.

அதேபோல், எப்போது ஆரம்பித்து எப்போது முடிப்பது என்கிற கால நிர்ணய மும் செய்துகொள்ள மாட்டார்கள். தாங்கள் செய்து வரும் காரியத்தை உடனடியாக செய்து முடிக்காமல், இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொண்டு காரியத்தை செய்து முடிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவார்கள்.

இவர்கள் உற்சாகமாகச் செய்யக்கூடிய செயல்கள் என்றால் அவை, 1. அரட்டை அடிப்பது 2. விகடம் பேசுவது 3. ஊர் சுற்றுவது 4. சீட்டாட்டம் 5. மது பானக்கடை இவைதான்.

காலத்தை வீணடிப்பதோடு காசையும் வீணடித்து விடுவார்கள். காலத்தை வீணடிப்பதால் இளமையை இழந்துவிடுவார்கள். சக்தியுள்ள வாலிபக் காலம் வேக மாகக் கழிந்து, நடுத்தர வயதையும் தாண்டிவிடுவார்கள். காசு போனால் வரும். காலம் போனால் வராது  :  அதெப்படி காலம் போனால் வராது என்கிறீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த அதேபோன்ற நாள் காலை, பகல், இரவு கொண்ட நாள் மீண்டும் வந்துள்ளதே! எனலாம்.

ஆனால் இருபத்தைந்து வயதில் ஒருவருக்கு கிடைக்கும், ஒருநாள் பொழுதும், 75 வயதில் ஒருவருக்குக் கிடைக்கும் ஒருநாள் பொழுதும் சரி சமம் ஆகிவிடாது. 25 வயதில் உடலில் சக்தி உண்டு. ஓடியாடி நிறைய வேலைகளைச் செய்ய லாம். இவனிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தால் துடிப்பாகச் செய்து முடிப்பான் என்று மற்றவர்களும் அவனை நம்பி அவனிடம் பொறுப்பைக் கொடுப்பார்கள்.

75 வயது மனிதரால் நடப்பதே சிரமம். உடல் வற்றி எலும்பும் தோலுமாக இருப்பார். நோயாளியாக இருப்பார். அவரால் உட்கார்ந்தால் எழுந்திருப்பது சிரமம். எழுந்தால் உட்காருவது சிரமம். எங்கும் கைத்தாங்கலாக அழைத்துப் போக யாரே னும் ஒருவர் உதவி தேவைப்படும். இந்த நிலையில் அவருக்குக் கிடைக்கும் ஒரு நாள் பொழுது என்பதை அவர் எப்படி பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? அதனால்தான் காலம் பொன்போன்றது என்றும், காலம் போனால் வராது என்றும் கூறுகிறார்கள்.

மேலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களிடம் உள்ள ஒரு பெருங்குறை – தாங்கள் ஈடுபடும் காரியத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அதற்கான பழியை மற்றவர் தலையில் சுமத்துவார். தானே என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் பொறாமை குணம் கொண்டவர் களாகவும் ஆகிவிடுகிறார்கள். வெற்றிபெற சகல தகுதிகளும் இருந்தும் தங்களால் அடைய முடியாத வெற்றியை மற்றவர்கள் அடையும்போது இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. உடனே, ‘அவனுக்கு என்ன தெரியும்? நேத்திப் பயல்! நான் ‘அ’னா, ‘ஆ’வண்ணா சொல்லிக் கொடுத்தேன். இன்றைக்கு அவன் பெரிய அறிஞன்போல பேசுகிறான். அவனுக்குக் கைதட்டவும் நாலுபேர்! கேனப்பயல் உலகம் இது!’ என்று வெற்றிபெற்றவனை மட்டப்படுத்தியோ, கடந்த காலத்தில் அவன் இருந்த சாதாரண நிலையை விவரித்துப் பேசியோ விமர்சனம் செய்வார்கள்.

இந்தப் பொறாமைக்குக் காரணம் என்ன?

வெற்றிபெற்றவனை இவர்கள் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். தன் நிலையைவிட அவன்நிலை உயர்வாக இருப்பதை இவர்கள் மனம் ஏற்க மறுக்கிறது.

இவர்களைவிட வெற்றி பெற்றவர்கள் அறிவிலும் திறமையிலும் குறைவுபட்ட வர்களாக இருக்கலாம். ஆனால், இவர்களிடம் இல்லாத உழைப்பு, தொடர் முயற்சி, தடைகளை எதிர்த்துப் போராடி முன் சென்றபோது அவர்கள் பட்ட துன்பங்கள், அவமானங்கள், மனக்காயங்கள், இதை எல்லாம் அவர்கள் எண்ணிப் பார்ப்ப தில்லை. ஏதோ மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிட்டதுபோல், அவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டதாவும், எல்லாம் நேரம் என்றும், அவன் காரியக்காரப் பயல், ஆளுக்கு தகுந்த மாதிரி பேசியும் நடித்தும், ஆட்களை நகத்திக்கொண்டே மேலே வந்து விட்டான்’ என்று ஒரே போடாகப் போட்டு அவன் வெற்றியை முடிந்த வரை இழிவுபடுத்தி விடுவார்கள்.

இன்னொன்று, இவர்கள் எப்போதும் எல்லோரிடமும் புகழ்ச்சி மொழிகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீண் புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் கைப் பணத்தை செலவு செய்வார்கள். மற்றவர் ‘இவரை நல்லவர்; தங்கமானவர்’ என்று, தனது முதுகுக்குப் பின்னால் புகழ்ந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்கு மாறாக இவரைப் பற்றி யாராவது அவதூறாகப் பேசினால், கேவலமான கருத்து கொண்டிருக்கிறான் என்று தெரியவந்தால் மனம் உடைந்து போவார்கள். தன்னைப் பற்றிய கீழான கருத்து கொண்டுள்ளவரை இவரே நாடிப்போய் உதவி செய்து, அவர் மனதில் தன்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். அதையும் மீறி, அவர் இவரைப்பற்றி தவறான கருத்து கொண்டிருப்பது தெரிந்தால் அதன் பிறகு அத்தகையவரைக் கண்டால் இவர்கள் பதுங்கவும் பின்வாங்கவும் செய்வார்கள்.

வெளியாருக்கு இவர்கள் உதவி செய்யும்போது அவர்கள் இவர்களை மெச்சிக்கொள்வார்கள் என்று ஒரு நினைப்பு. அந்தப் புகழ்ச்சியிலே ஒரு இன்பம். அதிகம் பழகியவர் அல்லது குடும்பத்தினரிடம் இவர்களுக்கு புகழ்ச்சி கிடைக்கப்போவதில்லை. பெருமை கிடைக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் விஷயத்தில் இவர்கள் அக்கரைக்காட்டமாட்டார்கள்.

இவர்களுடைய பார்வையில் பயம், கலக்கம், நம்பிக்கையின்மை எல்லாம் தென்படுவதைக் காணலாம். அதுபோல் யாரையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே பழகிக் கொண்டிருப்பார்கள்.

தாங்கள் செய்ய விரும்பும் அல்லது செய்யப்போகும் காரியங்களைப் பற்றி மற்றவர்கள் வியக்குமாறு பிரபலமாயிருப்பார்கள். கேட்பவர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். இப்படியாக வார்த்தைகளா லேயே தங்களுக்குத் தாங்களே பரிவட்டம் கட்டிக்கொள்ளும் இவர்கள், அதன்பின் காரியத்தைத் தொடங்குவார்களா என்றால், அதுதான் இல்லை.

அப்புறம் யாராவது, “அன்றைக்கு, ஏதோ பெரிய காரியத்தில் இறங்கப் போவ தாகச் சொன்னீர்களே, என்னாயிற்று?” என்று கேட்டால், அமெரிக்கா பொருளாதாரத்தில் வீழ்ந்துவிட்டதால் ஏற்றுமதி கம்பெனிகள் ஆர்டரை நிறுத்தி வைத்திருக்கின்றன,” என்று தொடங்கி, இதுபோல் ஏதாவது சில காரணங்களைச் சொல்லி, அதன் காரணமாக காரியம் தொடங்குவது சற்று கால தாமதமாகி வருகிறது என்று சமாதானம் கூறி முடிப்பார்கள்.

ஆனால் இவர்கள் கூறும் சமாதான வார்த்தைகளில் இருக்கும் உளறுபடி, குழறுபடியே இவர்கள் சொல்வது பொய் சால்ஜாப்பு என்பது மற்றவர்களுக்கும் புரிந்துவிடும். ஆனால், இவர்கள் கூறும் சால்ஜாப்பை கேட்பவர் அப்படியே நம்பி விட்டார் என்றுதான் இவர் நினைத்துக்கொள்வார்.

ஆனால் இவர்கள் எதிராளிகளுக்கு அவ்வப்போது ஐந்து, பத்து செலவு பண்ணக் கூடியவர்களாக இருப்பதால் அதை உத்தேசித்து, மற்றவர்களும் இவர்கள் கூறும் சால்ஜாப்பை உண்மை என்று நம்புவதுபோல் காட்டிக்கொள்வார்கள். எதற்கு அனாவசிய பொல்லாப்பு. ஏதோ, நேரில் பார்க்கும்போது ஒரு காபி வாங்கி கொடுக் கிறான், வெற்றிலை சீவல் வாங்கிக்கொடுக்கிறான். இவன் முகத்தை முறித்துக் கொள்வானேன்?’ என்று போய்விடுவார்கள்.
சரி; இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் வந்தது? சிலருக்கு சிறுவயதில் வாழ்ந்த சூழல், அல்லது வளர்க்கப்பட்ட சூழல். அன்பு இல்லாமல் கண்டிப்பு காட்டி வளர்த்த விதம். இயல்பாகவே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள்.

இதனால் அடுத்தவர்கள் இவர்களை உருட்டி, மிரட்டி வேலைவாங்கியிருப்பார்கள். தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படி அடிமைப்படுத்தியிருப்பார்கள். விபத்தால் கை, கால் ஊனம் ஆனவர்களும் உண்டு; பிறக்கும்போதே ஊனமாகப் பிறப்பவர்களும் உண்டு அல்லவா? அதுபோல் சிலர் வளர்ப்பால் தாழ்வு மனப்பான்மையாளராக ஆகி யிருப்பார்கள்; சிலர் பிறவிலேயே தாழ்வு மனப்பான்மை கொண்டவராகப் பிறந்திருப் பார்கள்.

எப்படியாயினும் தான் ஒரு தாழ்வு மனப்பான்மையாளர் என்கிற உண்மையை ஒருவர் எப்போது உணர்ந்துவிட்டாரோ, இத்தனை நாளும், தான் செய்து வந்த தவறான நடத்தை, பழக்கம் அனைத்திற்கும் தன் தாழ்வு மனப்பான்மைதான் கார ணம் என்பதை உணர்ந்துவிட்டாரோ, அன்று முதல் தனது தாழ்வு மனப்பான்மை விளைவான செயல்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொள்வார்; நிறுத்திக் கொள்வார். இப்போது அவர் தாழ்வு மனப்பான்மை அற்ற ஒரு சாதாரண – நார்மல் - மனிதராக சமநிலைக்கு வந்துவிடுவார்.

தாழ்வு மனப்பான்மை நீங்க…:

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்? இந்த உலகில் சிறந்த படிப்பு படிக்க, உயர்ந்த சம்பளத்தில் வேலையில் அமர, உல்லாச வாழ்க்கைக்கு செல்வம் திரட்ட, பாதுகாப்பான வாழ்வுக்கு பக்க பலம் சேர்க்க, தற்கால மனிதர்கள் அனைவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகையால் இந்த போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எந்த மனிதனிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள்.

மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு உங்களுக்கு உதவப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு அவர்கள் நன்றியுணர்ச்சி யுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். மற்றவர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.  வெற்றிநோக்குடன் செயல்படுபவர்கள், முதலில் தங்களைப் பற்றிய நல்ல அல்லது கெட்ட – எந்தவிதமான விமர்சனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட் டார்கள். அவர்கள் மனம் எல்லாம் அவர்கள் செல்லவேண்டிய வாழ்க்கைப் பயணத்தில் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதிலேயே குவிந்திருக்கும்.

‘மற்றவர்கள் மேம்போக்காக என்னைப்பற்றிக் கூறும் எந்த அவதூறுச் செய் திக்கும் என்னைத் துன்புறுத்தும் சக்தி கிடையாது’ என்றார் ஒரு அறிஞர். அவ்வ ளவு பொருள் பொதிந்த உண்மை!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து