முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தன்னாட்சி அமைப்பு

இந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.

புதிய தலைவர் தேர்வு

இந்த அமைப்பின்  தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம்  23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ராஜீவ் மெகரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கபட்டது. 

பதவிப்பிரமாணம்

இதற்கான அறிவிப்பை மத்திய நிர்வாகம் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சகம்  வெளியிட்டது. இந்த நிலையில், நேற்று காலை சி.ஏ.ஜி தலைவராக ராஜீவ் மெகரிஷி பதவியேற்றார். ராஜீவ் மெகரிஷிக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  துணை ஜனாதிபதி வெங்கையா நயுடு, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து