முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.68.18 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக ரூ.68.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி, பி.பி.முருகன் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

வளர்ச்சித் திட்டப் பணி

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், துர்க்கைநம்மியந்தல் ஊராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை பயன்படுத்துதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும், பள்ளியில் ரூ.26 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, இனாம்காரியந்தல் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இனாம்காரியந்தல் ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அம்மா பார்க் மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வரும் பணிகள், மேல்சத்திரம் கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டும் பணிகள், ஆகிய பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, விரைந்து முடிக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து, கருந்துவாம்பாடி கிராமத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகள், கொளக்கரவாடி கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், புதுமல்லவாடி கிராமத்தில் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கால்வாய் சீரமைக்கப்பட்டு வரும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றும் நடும் திட்டப் பணிகள் ஆகிய பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து