முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி முழுக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி முழுக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து புதன்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் .சுந்தரவல்லி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி ஓன்றியத்தில் ஆரம்பாக்கத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை டெங்கு தடுப்பு பணிகள் துவங்கியது. இதன்படி கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார், வட்டார சுகாதார ஓருங்கிணைப்பாளர் முருகதாஸ். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சம்பந்தன் ஊள்ளிட்டோர் ஆரம்பாக்கத்தில் சாலையோரம் கடைகளில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வகையில் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கின்றதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து டெங்கு கொசு ஊற்பத்தியாகும் பொருட்களை அகற்றி டிராக்டரில் ஏற்றி அப்புறப்படுத்தினர் .

மேலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேட்டுடன் கூடிய பொருட்களை வைத்திருக்கும் கடைகாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்கப்பட்டது. ஆரம்பாக்கத்தில் துவங்கி எளாவூர், பெத்திக்குப்பம், கும்மிடிப்பூண்டி பஜார் என சுமார் 16 கி.மீ தொலைவிற்கு ஓவ்வொரு பகுதியாக டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்றது. நிகழ்வில் சுகாதார மஸ்தூர் பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்வின் போது கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார துறையினர் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்த டெங்கு தடுப்பு பணியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஓதுக்குப்புறமான பகுதிகளில் குழி தோண்டி பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் நிகழ்வின் போது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து