முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தி.மலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடக்கிறது.

கபடி போட்டி

இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்த அனைவரையும் தி.மலை மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் ஏ.முனியன் வரவேற்றார். மாவட்ட கபடி கழக செயலாளர் ஆர்.ஆனந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று திருவண்ணாமலை மாவட்ட கபடி கழக தலைவர் வி.பவன்குமார் மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கிவைத்தார். இதில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலை எம்.ராஜா, பொதுச் செயலாளர் ஏ.சபியுல்லா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். தமிழகம் முழுவதும் 2வது நாள் நேற்று நடந்த போட்டியை தமிழ்நாடு மாவட்ட விளையாட்டு ஆணைய மாவட்ட முதுகலை மேலாளர் கே.புகழேந்தி, துவக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதுமிருந்து 26 மாவட்டங்களை சேர்ந்த வீராங்கணைகள் மாநில அளவில் நடைபெற்ற இந்த கபடி சாம்பியன்ஷிப் போட்டி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் இ.சரவணன், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் ஏ.பி.சுப்பிரமணியராஜா, மாவட்ட கபடி கழக இணை செயலாளர் எம்.ரமேஷ், மற்றும் பி.அன்பு, ஆர்.கலைச்செல்வம், அருண்குணசேகரன், எல்.சுந்தரம், மற்றும் கபடி குழு நடுவர்கள், கபடி கழக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் செய்திருந்தது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து