முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் உழவர் களஞ்சியம் 2 நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துணை வேந்தர் முனைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

 

விஐடி பல்கலைக்கழகத்தில் அக்13,14 ஆகிய இரண்டு நாட்கள் உழவர் களஞ்சியம் என்ற வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து சுமார் 4 ஆயிரம் விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்றும் நளையும் நடைபெறும் இந்த உழவர் களஞ்சியத்தை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் இஸ்ரேல் நாட்டின் வேளான் அறிஞர்கள் முனைவர் ஜோசப் ஷெவல் மற்றும் முனைவர் பருக் லெவி மற்றும் வேளாண் விஞ்ஞானி முனைவர் எச்.பிலிப், மற்றும் வேளாண் நிபுணர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று வேளாண்மையில் புதிய முயற்சிகள் சம்மந்தமாக பேசினர்.

கருத்தரங்கம்

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் வேளான் சார்ந்த பணிகளில் உற்பத்தியை பெருக்கும் வகையில் வேளாண் பெருமக்களுக்கு நவீன வேளாண் பணிகள் மேற்கொள்ள புதிய வேளாண் உத்திகளை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் வழங்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் வேளான் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

விஐடி நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையத்தின் சார்பில் மூன்றாவது ஆண்டாக இன்றும் நாளையும் நடைபெறும் இந்த வேளான் கண்காட்சி கருத்தரங்கில் சுமார் 4 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

இதன் தொடக்க விழா இன்று காலை விஐடியில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி இணைதுணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் வரவேற்றார். விஐடி வேளாண் உழவர் களஞ்சியத்தின் சிறப்புகள் பற்றி பேராசிரியர் எஸ்.பாபு விளக்கி கூறினார்.

துணைதலைவர் பேச்சு

 

நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்து பேசியதாவது: விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டாக உழவர் களஞ்சியம் நடத்தப்படுகிறது. சிலஆண்டுகளுக்கு முன்பு மாணவர் ஒருவர் என்னிடம் அவரது பயோ டேட்டா அளிக்க வந்தார் அதில் பெற்றோர், தொழில் என்ற காலம் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. நான் அந்த மாணவரிடம் அது பற்றி கேட்டேன் அதை கூற அந்த மாணவர் தயங்கினார். நான் வலியுறுத்தி கேட்டபோது அவரது தந்தை விவசாயம் செய்வதாக அந்த மாணவர் கூறினார். அப்போது எனக்கு தோன்றியது சமுதாயத்தில் விவசாயிகள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பது தான். அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் உருவனதுதான் இந்த உழவர் களஞ்சியம். நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது சமுதாயமும் வளரவேண்டும். விஐடி பல்கலைக்கழகம் வளர்ந்து விட்டது அதே போல வேலூர் மாவட்டம் வளரவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் இந்த உழவர் களஞ்சியம் திட்டம். இன்றைய தலைமுறையினரிடம் விவசாய தொழில் என்றால் நஷ்டம் என்றும் நிலத்தில் நாற்று நடுவதை விட கல் நட்டால் லாபம் என்று நினைக்கின்றனர் அதை மாற்ற வேண்டும் என்பதற்கான திட்டம் தான் இது என்று பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து