Idhayam Matrimony

பப்பாளியை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

திங்கட்கிழமை, 30 அக்டோபர் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

பப்பாளிப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம்.  இதன் மற்றொரு பெயர் பறங்கிப்பழம் என்பதாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ, தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் விளைகிறது.  பப்பாளி காயாக இருக்கும்போது பச்சை நிறமாகவும், நன்றாக பழுத்த பழம் மஞ்சள், மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளிக்கும்.

பப்பாளிப்பழத்தின் நுனி பாகம் குறுகியும், அடிபாகம் பெருத்தும் இருக்கும். சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியின் கனிகள், விதைகள், இலைகள் ஆகியவை மருத்துவகுணம் உடைய பகுதிகள் ஆகும். பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் (பழச்சர்க்கரை).  இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது.  மேலும் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.  இதில் போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன.  சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளிப்பழத்தில் வைட்டமின் பி1 – 11 மில்லிகிராம், வைட்டமின் பி2 – 72 மில்லிகிராம், வைட்டமின் சி – 13 மில்லிகிராம், இரும்புச்சத்து – 0.1 மில்லிகிராம், சுண்ணாம்புச்சத்து – 0.3 மில்லிகிராம் உள்ளது.

பப்பாளிக் காய்களில் உள்ள பாலில் இருந்து பப்பைன் என்னும் புரதங்களை சிதைக்கும், செரிமானத்திற்கு உதவும் நொதி பொருட்கள் (என்சைம்), கைமோப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, அஸ்காரிபிக் அமிலம், தையமின், ரைபோஃளவின், கார்ளப்பசமைன் போன்ற ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

பப்பாளியின் மருத்துவ குணங்கள்: 

பப்பாளியில் சுரக்கும் பாலினை காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும்.   

தேள் கொட்டிய இடத்தில் பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு ஏற்படும்.  பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்துவிடும். 

பப்பாளிக்காயை துண்டுகள் அல்லது சாற்றை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்பூழுக்கள் வெளியேறும்.  பப்பாளிக் காயை கூட்டாக செய்து சாப்பிட்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 

பப்பாளி இலையை நீரில் வேகவைத்து அந்த நீரால் உடல்; வலியுள்ள இடங்களில் கழுவினால் உடல் வலி நீங்கும்.  பப்பாளி இலையை அரைத்துப் பூசினால் கட்டிகள் உடையும், வீக்கம் வத்தும்.  பப்பாளி இலைகளின் சாறு ஜூரம் நீக்கும்.  பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது.  மேலும் இந்தப்பழத்தில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. 

அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.  பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

புப்பாளிப்பழம் இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.  நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இந்தப்பழத்தில் உள்ளது.  கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப்பழமே சிறந்த உணவாகும்.

வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்செரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.  பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன.  ஆதனால்தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர். 

மேலும் அழற்சியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது. 

பப்பாளிப்பழம் புற்றுநோயையும் குணப்படுத்துகிறது.  இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.  இதில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் ஆகியவை புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

சாப்பாட்டிற்கு பின்பு பப்பாளியை சாப்பிட்டால் தேவையற்ற சதைகள் குறையும், குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.  மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்;டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.  நரம்புத்தளர்ச்சிக்கு மிக நல்லது.  பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன், பல், எலும்பு வலுவடையவும் உதவுகிறது.

ஆண்டிபயாடிக் மருந்துகளில் சிகிக்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட, குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். 

நன்றாக பழுத்த பப்பாளிப்பழத்தை கூழ் போன்று பிசைந்து அதில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசினால் முகச் சுருக்கம் நீங்கி முகம் நல்ல பொழிவு பெறும். பப்பாளிப்பழத்தை முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். 

பப்பாளித்தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து கூழ் போல் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.  வறண்ட மேல் தோலை நீக்கி, புதிய மென்மையான தோலை உருவாக்குகின்ற சக்தி பப்பாளிக்கு உண்டு.  இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பப்பாளிகளைச் சிறப்பித்துக் கூறுவர். 

தினசரி பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் அகற்றி இளமைப்பொழிவோடும் வாழலாம்.  பப்பாளியை தொடர்ந்து நான்கு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புச்சத்து 19.2 சதவிகிதம் குறைத்துவிடும்.

பப்பாளியிலுள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன் என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், கார்பின் இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

பப்பாளி சாப்பிட்டால் பல் சம்மந்தமான குறைகள் நீங்கும்.  சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்;லை கரைக்க பப்பாளி சிறந்த மருந்தாகும்.  பப்பாளிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை தூண்டவும் பெரும் பங்கு வகிக்கிறது. 

பப்பாளிப்பழம் கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்,  இதயத்திற்கு நல்லது,  பித்தத்தைப் போக்கவல்லது,  மனநோய்களைக் குணமாக்குவதில் உதவுகிறது, கணையம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உடலுக்கு தெம்பூட்டும் சக்தி வாய்ந்தது.

பப்பாளிப்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.  பப்பாளிபழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்தவித நோயும் தாக்க வாய்ப்பில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து