முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயன்பாட்டில் இல்லாத வீடுகள், வாகனங்கள் பழுதுபார்க்கும் ஒர்க்சாப்களை கண்டறிந்து டெங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன். சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பாலாறு மேம்பாலம் அருகில் உள்ள பகுதிகளில் கலெக்டர் சி.அ.ராமன் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தனியார் திரையரங்கில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று பார்வவையிட்டு பின்னர் திரையரங்கம் எதிரில் உள்ள பஞ்சர் போடும் கடையில் வெளியில் போடப்பட்டிருந்த வாகன டயர்களில் மழைநீர் தேங்கி இருந்ததை பார்வையிட்டு கடை உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து டயர்களை அப்புரப்படுத்த உத்திரவிட்டார்.

பின்னர் அங்குள்ள தண்ணீர் வழங்கும் மேல்தேக்க நீர் தொட்டியில் குளோரின் சரியாக கலந்து வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து முறையாக குளோரின் கலந்து விநியோகிக்க சுகாதார அலுவலருக்கு உத்திரவிட்டார். பின்னர் அங்குள்ள சாந்தி நிலையம் என்ற தனியார் வளாகத்தில் ஆய்வு செய்து அந்த வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத வீட்டின் தண்ணீர் தொட்டிகளில் டெங்கு புழுக்கள் மற்றும் குப்பைகள் இருப்பதை உறுதி செய்து அந்த வளாக உரிமையாளருக்கு ரூ10 ஆயிரம் அபராத்தை விதித்து வளாகத்தை உடனடியாக சுத்தம் செய்து அதற்குண்டான செலவினத்தையும் உரிமையாளரிடம் வசூலலிக்க வேண்டும் என்று சுகாதார அலுவலர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டார்.

அலுவலர்களுக்கு உத்தரவு

 

பின்னர் மாநகராட்சி சுகாதார அலுவலரிடம் இப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக காய்ச்சல் பாதித்தவர்கள் குறித்து அறிக்கையை பார்வையிட்டு ஆய்வு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் களபணியாளர்கள் முறையான கால அளவில் வீடுகளை ஆய்வு செய்கின்றார்கள். ஆனால் கொசு புழுக்கள் வளரும் இடங்களான பயன்பாட்டில் இல்லாத வளாகங்கள் கடைகள் வீடுகளை மறந்து விடுகிறார்கள் இது மிகவும் கண்டிக்கதக்கது. ஆகவே ஆய்வு செய்யும் பகுதியில் விழிப்புடன் பயன்பாட்டில் இல்லாத வீடுகள், பழைய சமான்கள் சேகரிக்கும் கடைகள், வாகனங்கள் பழுதுபார்க்கும் ஒர்க்சாப்கள் மற்றும் பஞ்சர் போடும் கடைகளையும் கண்டறிந்து டெங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கலெக்டர் சி.அ.ராமன். உத்திரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.மணிவண்ணன், காட்பாடி வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து