முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலின் நிலைப்பாட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, மக்களே ஏற்றுக்கொள்ளாத கமலின் நிலைப்பாட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பில்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழக அரசியலில் கமலின் பிரவேசம் அரசியல் கட்சிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருவதன் மூலம் பா.ஜனதாவுக்கு எதிரான வியூகத்தை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவரது வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யூகிப்பது சரியாக இருக்காது. கமலை பொறுத்தவரை ஊழல், தீவிரவாதம், மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதாக சொல்கிறார். ஆனால் அவர் முதலில் சந்தித்தது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை. அந்த மாநிலத்தில் நடப்பது என்ன? 15 மாதங்களில் 14 இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சிவப்பு தீவிரவாதம் என்று சொல்லும் அளவுக்கு பினராயி விஜயனின் ஆட்சியின் காட்சி தெரிகிறது. அவரை சந்தித்து விட்டு அங்கு நடந்த உயிரிழப்பை கூட பொருட்படுத்தாமல் தனது சுயநலத்தை கருத்தில் கொண்டு காவி தீவிரவாதம் என்று பேசுகிறார்.

 அப்படி பேசினால் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நினைத்தார். எதிர்ப்பு கிளம்பியதும் ‘யூ’டர்ன் அடித்தார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து விட்டு சாரதா சிட்பண்ட் ஊழலில் சிக்கி இருக்கும் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார். கருப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்து வரும் சோதனைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள போலி நிறுவனங்கள். இவையெல்லாம் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை இல்லையா? இதை பற்றி வாயே திறக்கவில்லையே.

ஆரம்பத்தில் கருப்பு பண ஒழிப்புக்கு ஆதரவு என்றார். பின்னர் ஆதரித்தது தவறு என்றார். நிலவேம்பு குடிநீரை குடிக்காதீர்கள் என்றார். அதன் பிறகு நான் அப்படி சொல்லவில்லை என்றார். அவரது நிலைப்பாட்டில் எந்த தெளிவும் இல்லை. அவரது அரசியல் பிரவேசம் ஒரு சார்பாக இருப்பதாக தெரிந்ததால் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அதே போல் கண்டனங்களும், கருத்துக்களும் தொடர்ந்து சுயநலம் சார்ந்த ஒரு தலைபட்சமாக இருப்பதால் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களே ஏற்றுக் கொள்ளாத அவரது நிலைப்பாட்டை பற்றி பா.ஜனதாவுக்கு கவலையில்லை. எந்த பாதிப்பும் எற்படவும் செய்யாது. ஒரு வேளை இது கமல் பாணியாக இருக்கலாம். ஆனால் மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து