முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனை விற்பனை சட்டம் மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்: தி.மலை கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருவண்ணாமலை

கட்டட, மனை, விற்பனை சட்டத்தை மீறினால் அபராதம், சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

எச்சரிக்கை

 

கட்டட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) 2016 என்ற சட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை அமுல்படுத்த தமிழ்நாடு கட்டட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி எந்தவொரு கட்டிட உரிமையாளரும் எந்தவொரு கட்டடத்தையோ அல்லது மனை பிரிவையோ (500 சதுர மீட்டர்) நில பரப்பளவுக்குமேல் அல்லது 8 குடியிருப்புகளுக்குமேல்) தமிழ்நாடு கட்டட , மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவிளம்பரத்தையும் கொடுப்பதோ சந்தைப்படுத்துவதோ, வீட்டை பதிவிட செய்வதோ, விற்கவோ, அல்லது விற்க முயற்சி செய்வதோ அல்லது பகுதியாகவோ வாங்குமாறு அறிவுறுத்துவதோ கூடாது, மேலும் கட்டட உரிமையாளர், மேம்பாட்டாளர் எந்தவொரு விளம்பரமும் கொடுப்பதாக இருந்தாலும் தமிழ்நாடு கட்டட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகளின்படி பெற்றுள்ள பதிவு எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இந்த விதிகள் நடைமுறைக்கு வந்த 22.06.2017க்கு முன் முடிவடைந்த திட்டங்களுக்கு பணிநிறைவுச்சான்று விவரம் அல்லது பதிவுச்சான்று பெறுவதிலிருந்து விலக்களிக்க கோரிய உரிய திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்த விவரஙகளை குறிப்பிட வேண்டும்.

இக்குறிப்புகளை வீடு, மனை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இடைத்தரகராக செயல்படும் ரியல் எஸ்டேட் முகவர்களும் இக்குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர் மறறும் ரியல் எஸ்டேட் முகவர்கள் மீது இச்சட்டத்தின்படி சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து