முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை காலம் கடத்தாமல் கண்டறிவது நல்லது நுரையீரல் சிறப்பு மருத்துவர் பழனியப்பன் தகவல்

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -: சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை காலம் கடத்தாமல் கண்டறிவது நல்லது என்று மதுரை ஸ்ரீ மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சிஓபிடி தினத்தை முன்னிட்டு அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாம் அன்றாட வாழ்வில் புகையிலையின் தீமைகள் உணர்த்தும் பலவிதமான விளம்பரங்களை திரையரங்குகளிலும், காணொலியிலும் காண்கிறோம். இருப்பினும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதிப்படியான மக்கள் புகையிலையை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் புகைப்பிடிப்பதே நுரையீரல் அடைப்பு நோய் வர முக்கிய காரணமாகும். இவ்வாறு புகை பிடிப்பவர்களுக்கும், அவர்களைச் சார்ந்து புகை பிடிக்காதவர்களுக்கும் மருத்துவ ரீதியாக பார்க்கும்போது சிஓபிடி மற்றும் சுவாச புற்றுநோய் வருவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
நாள்பட்ட சுவாச குழாய் சுருக்கம் மற்றும் மூச்சுத்திணறல் இவை இரண்டையும் சேர்த்து சிஓபிடி என்று அழைக்கிறோம். சிஓபிடியின் அறிகுறிகளாக நாள்பட்ட இருமல், சளி உண்டாகுதல் மற்றும் மூசுசு விடுதலில் சிரமம் ஆகியவை கருதப்படுகிறது. இந்த மூச்சுத் திணறலால் நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மேலும் இதுபோன்ற மோசமான நிலையின்போது நம்மால் சாதாரண வேலைகளைக் கூட செய்ய இயலாது. எடுத்துக்காட்டாக நம்மால் நடப்பது மற்றும் படி ஏறுவது கூட சிரமமாக இருக்கும்.
சிஓபிடி வருவ¬ற்கான பொதுவான காரணங்கள், மாசடைந்த காற்றும், பெற்றோர்களின் மரபணுக்கள் வழியாக வருதல் மற்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் விட்ட ஆஸ்துமா ஆகியவை ஆகும். ஆனால் சிஓபிடி வருவதற்கான முதன்மையான காரணம் புகைப் பழக்கமே குகும். இதில் புகை பிடிக்காதவர்களும் அடங்குவர். இதன் விளைவாக நுரையீரல் மற்றும் சுவாச குழாயில் வீக்கம் உருவாகிறது. மேலும் சளி உற்பத்தியை துரிதப்படுத்தி, சுவாச குழாயை அடைக்கச் செய்கிறது.
இதுபோன்ற நேரங்களில் நுரையீரல் வீக்கம் மற்றும் சுவாச குழாயின் நிலைமை, புகை பிடித்ததன் விளைவாக அறிகுறிகள் மேலோங்கி, மூச்சுத் திணறல் அதிகமாகிறது. இதற்கு பெயர் சிஓபிடி எக்ஸாசெர்பேசன் ஆகும். இது உருவாக நிறைய காரணங்கள் உள்ளன. அதில் பொதுவான காரணம் சுவாச குழாயில் ஏற்படும் கிருமிகள் அல்லது வைரஸ் தொற்றுக்கள் ஆகும். இது சாதாரண நிலையில் இருந்து இறக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம்.
அண்மையில் 12 நகரங்கள்  மற்றும் 11 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சிஓபிடியின் பரவும் தன்மை அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே சிஓபிடியின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது அவசியமாகும். இல்லையேல் சாதாரண நிலையில் உள்ள சிஓபிடி மிகவும் மோசமான நிலையில் கொண்டு சென்றுவிடும். பொதுவாக சிஓபிடி நோயாளிகள் அதிகப்படியாக மாத்திரைகள் மற்றும் டானிக் வகை மருந்துகளையே நம்புகின்றனர். இது சிறிய வீக்கத்திற்கு மட்டுமே உதவும். சிஓபிடி என்பது நுரையீரலில் உள்ள நாள்பட்ட வீக்கம் மற்றும் சுவாச குழாயின் சுருக்கம் ஆகும். இதற்கு சரியான மருத்து கார்டிகாஸ்டெரியட்ஸ் ஆகும். இதனை உறிஞ்சும் முறையில் எடுத்துக் கொள்வதால் அதிகப்படியான நோயாளிகள் பயனடைவர். இதுபோன்ற உறிஞ்சும் முறையில் எடுக்கும் மருந்தானது சிஓபிடி சிகிச்சையில் முதன்மை தேர்வாக இருக்கிறது. மற்றும் மிக குறைந்த அளவு மட்டுமே பக்கவிளைவு இருக்கும்.
இவ்வாறு டாக்டர் எம்.பழனியப்பன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து