முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு: தமிழிசை

tamilisai 2016 12 8

சென்னை,  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து தேர்தல் குழு முடிவு செய்யும் . இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூடி முடிவுகளை டெல்லிக்கு தெரிவிப்போம். - டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் 

 தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து தேர்தல் குழு முடிவு செய்யும் என அவர் கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூடி முடிவுகளை டெல்லிக்கு தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார். . குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் முறையாக பராமரிக்கபபடவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து