முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம் வெள்ளி கற்பக விருட்சக வாகனத்தில் அண்ணாமலையார் பவனி

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவம் நேற்று விமர்சையாக நடந்தது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி கற்பக விருட்சக வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார கோவிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனை அபிஷேக வழிபாடுகள் நடந்தன.

 4ம் நாள் உற்சவம்

அதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள ராஜகோபுரம் எதிரிலுள்ள அலங்கார மண்டபத்திலிருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. மூஷிக வாகனத்தில் விநாயகரும் நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அலங்கரிக்கப்பட்ட யானை ருக்கு முன்செல்ல தூப தீபாராதனைகளுடன் நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாலை 6 மணியளவில் கோவில் கலையரங்கில் பரதநாட்டியமும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றன. நேற்று 4ம்நாளான இரவு உற்சவம் 9.30 மணியளவில் தொடங்கியது. அப்போது அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 3ம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் எதிரே 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி கற்பக விருட்சக வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனிவந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாடவீதி முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து