முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் உழவர்களுக்கு தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாம்: 60 உழவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

விஐடியின் வயல் ( VAYAL ) வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட்ட தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 உழவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். மதுரை விபிஎஸ் ( VPS ) இயற்கை தேனீ வளர்ப்பு பண்ணையின் நிறுவனர் திருமதி. ஜொசிபின், உழவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

பயிற்சி முகாம்

விஐடியின் வயல் எனப்படும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் உழவர்களுக்கான தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் வயல் மையத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், திருண்ணாமலை, திருவள்ளுர், சென்னை, விழுப்புரம், தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, கரூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமில் உழவர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த தகவல்களுடன், தேனீக்களை கையாளும் முறை, தேனீ பெட்டிகளை பராமரித்தல், தேனாடைகளை கையாளும் முறைகள், தேன் தயாரிப்பு, பல்வேறு பூக்கள் மூலம் தேன் உருவாக்கும் முறைகள் உள்ளிட்டவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மதுரை விபிஎஸ் இயற்கை தேனீ பண்ணையின் நிறுவனர் திருமதி. ஜொசிபின், சிறப்பு ஆலோசகராக பங்கேற்று உழவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

மேலும் இப்பயிற்சி முகாமில் குறைந்த தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுதல் பற்றிய தொழில்நுட்பம் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உழவர்கள் அதில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி முகாமில் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் தேனீ வளர்ப்பு சம்மந்தமான உழவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றுது.

முகாமில் தொழில் நுட்பரீதியான உழவர்களின் சந்தேகங்களுக்கு விஐடி வேளாண் ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் பாபு, மையத்தின் பேராசிரியர்கள் முனைவர் சத்யா, முனைவர் பழனிச்சாமி ஆகியோர் விளக்கமளித்தனர். முகாமில் பங்கேற்ற உழவர்கள் வருங்காலத்தில் விஐடி வயல் மூலமாக பலவிதமான பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பது பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து