முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் வீடு தேடிவரும் ருசிமிகு சிறுதானிய தின்பண்டங்கள்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

இயற்கை ஆர்வலரின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலர் ஒருவரின் புதுமையான முயற்சியால் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிகு திண்பண்டங்களை வீட்டிற்கே தேடி வந்து விநியோகித்திடும் புதுமையான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்து வருகிறது.

பொதுவாக சிறுதானியங்கள் என்பது வரகு,சாமை,தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளை குறித்திடும்.பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இன்றைய காலகட்டத்தில் குறைவான மழைபொழிவு,குன்றிய மழைவளம்,தேவைக்கதிகமான உரப்பயன்பாடும் அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடுகளும்,வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம் போன்ற காரணிகள் சிறுதானியங்களே வருங்கால உணவாகும் என்ற கருத்தினை வலுப்பெற வைக்கிறது.கடந்த காலங்களில் அரிசியை பயன்படுத்திட வசதியில்லாத ஏழை எளிய மக்களின் உணவாக திகழ்ந்த சிறுதானியங்கள் இன்று பன்மடங்கு வசதி படைத்த செல்வந்தர்களின் அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.நம்முடைய முன்னோர்கள் போல் 80முதல்100வயது வரையில் ஆரோக்கியமாக   வியாதிகள் இல்லாமல் வாழந்திட சிறுதானியங்களான வரகு,குதிரைவாலி,சாமை,தினை,காடைக்கன்னி,கம்பு, சோளம்,கேழ்வரகு ஆகியவற்றை சமைத்து அன்றாட உணவாக பயன்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலரும் அருந்தானிய உணவுக்கலை நிபுணரும், முதுநிலை பட்டதாரியுமான க.காளிமுத்து என்பவர் தற்போது அன்னவயல் என்ற பெயரில் சிறுதானிய சிறப்பு திண்பண்டங்களை பாரம்பரிய முறையில் சுவைபட தயாரித்து அவற்றினை பக்குவமாக பேக்கிங் செய்து அலைபேசியில் அழைத்;து ஆர்டர் தருவேரின் இல்லங்களைத் தேடிச் சென்று விநியோகித்து வருகின்றார்.திருமங்கலம் நகர் ராஜாஜி 7வது தெருவில் உள்ள அலுவலகத்தில் அருந்தானிய உணவுக்கலை நிபுணர் காளிமுத்து,அவரது உதவியாளர்களுடன் இணைந்து தினம்தோறும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன்படி நாள்தோறும் வரகில் தயாரிக்கப்படும் அச்சுமுறுக்கு,தினையால் தயாரிக்கப்படும் சீரணி,அதிரசம்,லட்டு குதிரைவாலியால் தயாரிக்கப்படும் காராச்சேவு,சீவல்,மிக்சர் போன்ற பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் செக்கில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணையை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.தற்போது பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 3காரவகைகள்,3சுவீட் வகைகள்,3தின்பண்ட வகைகள் பேமிலிகிட் ஆக ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சேயற்கையான ரசாயன உரங்கள் தவிர்த்து முற்றிலும் இயற்கையான முறையில் அன்னவயலில் விளைவிக்கப்படும் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்களை வீட்டில் இருந்தபடி பெற்றிட ஒருநாள் முன்னதாக 99435-95340என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய தின்பண்டங்கள் மறுநாள் உரிய நேரத்தில் வீடுதேடி வந்து விடுகிறது.அதே போல் அன்னவயலில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்படும் 6வகையான காய்கறிகள் ரூ.100க்கு வீடு தேடிவந்து விற்பனை செய்யப்படுகிறது.மேலும் முற்றிலும் புதுமையான முறையில் தினம் தோறும் மாலை நேரங்களில் இங்கு தயாரிக்கப்படும் வெற்றிலை பஜ்ஜி,வாழைப்பூ வடை,பசலைகீரை பஜ்ஜி இவற்றுடன் முடக்காத்தான்,முசுமுசுக்கை, வாழைத்தண்;டு, கருவேப்பிலை மற்;றும் முருங்கை சூப் வகைகள் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவைகளாகும்.

இயற்கை ஆர்வலர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு திருமங்கலம் நகர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்டு வாசலுக்கு தேடிவரும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் மிகுந்த ருசியுடன் கிடைப்பதால் தினம் தோறும் ஏராளமானோர் தங்களுக்காகவும் தங்களது குழந்தைகளுக்காகவும் பாரம்பரிய சிறுதானிய தின்பண்ட வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்கின்றனர்.இயற்கை ஆர்வலர் காளிமுத்து மேற்கொண்டுள்ள இந்த புதுமையான முயற்சியின் காரணமாக தற்போது திருமங்கலம் நகர மக்கள் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை வாங்கி உண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து