முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்.கே.ஜி மாணவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

எல்.கே.ஜி மாணவர்களுடன் அரக்கோணம் ரோட்டரி சங்கமும், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனமும் இணைந்து ஐகேன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியது. இது குறித்து விவரம் வருமாறு.

கிறிஸ்துமஸ் விழா

வேலூர் மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டையில் ஸ்ரீகிருஷ்ணா ஐகேன் பள்ளி உள்ளது இந்த பள்ளியில் பயிலும் எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் மத்தியில் நேற்று (21ந் தேதி) காலை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அரக்கோணம் ரோட்டரி சங்கமும், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு சங்கத்தின் தலைவரும், மஹாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமயாளருமான பி.இளங்கோ தலைமை தாங்கினார்.

ஐகேன் பள்ளி தலைமை ஆசிரியர் கௌரி வரவேற்று பேசினார். செயலாளர் தனசேகர், சமூக பணிகள் இயக்குனர் ஆர்.வெங்கட்டரமணன் முன்னிலை வகித்தனர் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன செயலாளர் டிஆர்.எஸ்.ரவிக்குமார் கிறிஷ்துமஸ் கேக்கினை வெட்டி மாணவர்களிடம் வழங்கினார் நிகழ்வில் ரோட்டரி அங்கத்தினர்கள் அருணா வடிவேலன், டைம்ஸ் சீனிவாசன், ஜிகே.வெங்கடேசன், விக்னேஷ் பத்மநாபன், மகேஷ், ஆகியோருடன் பள்ளி ஆசிரியர்கள், கிறிஸ்துமஸ தாத்தா வேடமணிந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து