சென்னை, ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தலே அல்ல அது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி என பா.ஜ.க தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி குறித்த கேள்விக்கு ஆர்.கே நகரில் நடந்தது தேர்தலே அல்ல என்று தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் மக்கள் தவறான ஒருவருக்கு வாக்களித்துள்ளனர். இனி அவர்களுக்கான தேவையை போராடித்தான் பெற வேண்டும். - தமிழிசை
மக்களிடம் சுருட்டி பெற்ற பணத்தை சுருட்டி சுருட்டி மக்களிடமே கொடுத்தார்கள். தினகரன் வெற்றிப்பெற்றுள்ளார், ஆனால் இந்த வெற்றி வாங்கப்பட்ட வெற்றி. ஆர்.கே.நகர் வாக்குகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் மக்கள் தவறான ஒருவருக்கு வாக்களித்துள்ளனர். இனி அவர்களுக்கான தேவையை போராடித்தான் பெற வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்.