முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் விவசாய நடைமுறைகள் கலந்துரையாடல்: வருவாய் நிர்வாக ஆணையர் பங்கேற்பு

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் தலைமையில் தி.மலை மாவட்டத்தில் தோட்டத் தொழில் மற்றும் விவசாய நடைமுறைகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டம்

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பா.சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோட்டத் தொழில் மற்றும் விவசாய நடைமுறைகளில் உலகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் மூலம் செலவுகளை குறைப்பதற்கும், இரசாயன பூச்சிக்கொல்லிகள் கம்மியாக பயன்படுத்துவது குறித்தும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இயற்கைக்கு உட்பட்டு நாம் செய்ய வேண்டியவைகள் குறித்தும், அதிகளவில் மகசூலுடன், தரமான விவசாயம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், மன்புழு உற்பத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், குறைந்த செலவில் காய்கறிகள் மற்றும் மாங்கய் மரங்கள் உற்பத்தியில் வேர்பகுதி நீர்பாசனம் பயன்படுத்துவது குறித்தும், பூஞ்சானத்தின் முக்கியத்துவம் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு பயிர் மகசூல் அதிகரிக்கப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. விவசாயத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் மூலம் பொருளாதார வளர்ச்சி மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது’ என்றார்.

முன்னதாக, வருவாய் நிர்வாக ஆணையர் மேற்கு ஆரணி ஊரட்சி ஒன்றியம், வண்ணாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தேக்கு மரம் தோட்டத்தையும், கொங்கராம்பட்டு கிராமத்தில் செரிவூட்டும் கிணற்றையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கல் கிராமத்தில், குபேர லிங்கம் அருகில் கற்பாறை தடுப்பணை கட்டப்படுள்ளதை பார்வையிட்டு, தேவனந்தல் கிராமத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு பழங்களின் மரங்கள் தோட்டம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து