முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்டத்தில் விதை மையங்களில் தனிப்படையினர் ஆய்வு

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள விதை விற்பனை மையங்களில் தனிப்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குநர் வேலூர் (பொறுப்பு) முத்துராமன், ராஜேந்திரன் (தருமபுரி) ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திடீர் ஆய்வு

ஆய்வின்போது விதை விற்பனை பதிவேடு, விதை உரிமம், விற்பனை ரசீது, விதை சேமிப்பு முறைகள், காலாவதியான விதைகள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் விதை விற்பனை நிலையங்களில் முறையான கொள்முதல் விவரம் மற்றும் இருப்பு விவரங்கள் இல்லாதது கண்டறிய்பபட்டது. இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 8.2 டன் நெல் விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் தரமான சான்று பெற்ற விதைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் தவறுகள் கண்டறியப்பட்டால் விற்பனைக்கு தடை விதிப்பதுடன் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதுகுறித்து இணை இயக்குநர் முத்துராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விவசாயிகள் விதைகள் வாங்கும்போது விற்பனை நிலையங்களில் விதை விவர அட்டையில் உள்ள விவரங்களை சரிபார்த்து விதை குவியல், முளைப்புத் திறன் சதவீதத்தை கேட்டு தெரிந்து கொண்டு விதைகளை வாங்க வேண்டும்.

மேலும் பயிர் ரகம், குவியல் எண், காலக்கெடுநாள் ஆகியவை குறிப்பிட்டுள்ளதா எனவும் விற்பனையாளர்களிடம் கையப்பம் பெற்று விவசாயிகள் கையப்பமிட்டு விதைகள் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார். ஆய்வின்போது விதை ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி (திருவண்ணாமலை), முருகன் (ஆரணி), தாமோதிரன் (ஓசூர்), அருண்குமார் (பழனி), ராஜி (திண்டுக்கல்) உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து