Idhayam Matrimony

தி.மலையில் பவுர்ணமி விழா 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையட்டி விடிய விடிய 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நேற்று காலை 10.08 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்கிழமை) காலை 8.49 மணிக்கு நிறைவடைந்தது.

பக்தர்கள் கிரிவலம்

இதையட்டி திருவண்ணாமலையில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கி மாலை 5 மணிக்குமேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பவுர்ணமி மற்றும் ஆங்கில புத்தாண்டையட்டி அண்ணாமலையார் கோவிலில் கட்டண தரிசனம், பொது தரிசனம் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து உண்ணாமலையம்மன் அண்ணாமலையாரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலத்தில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்ட பக்தர்கள் நேர்அண்ணாமலை, அடிஅண்ணாமலையிலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வழிபட்டனர். பக்தர்களுக்கு கிரிவலப் பாதை மற்றும் கோவில் வளாகம் ஆகிய பகுதிகளில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளிட்ட ஆசிரமங்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அடிப்படை வசதிகள்

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பாதுகாப்பு வசதி கருதி ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை யட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. கிரிவலப் பாதையிலுள்ள கழிவறைகளில் பவுர்ணமி தினத்தன்று அதிக கட்டணம் வசூலிப்பதால் பொது மக்களும் பக்தர்களும் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் கிரிவலப் பாதை சுகாதார சீர்கேடாக மாறிவிடுகிறது. இதனால் கிரிவலம் வரும் பக்தர்கள் துர்நாற்றத்தில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தீபத்திருவிழாவின்போது அனைத்து கழிவறைகளும் கட்டணமின்றி பக்தர்கள் பயன்பத்தலாம் என ஆட்சியர் அறிவித்தார். ஆனால் பவுர்ணமி நாட்களில் கழிவறைகளை பயன்படுத்த கட்டணம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகாததால் கழிவறைகளில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலானவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைகளை பயன்படுத்தாமல் திறந்த வெளி கழிவறையாக பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தன்னார்வலர் சார்பில் தற்காலிக சிறுநீர் கழிவறை இலவசமாக பயன்படுத்தும் வகையில அமைக்கப்பட்டிருந்தது.

இது பக்தர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து பவுர்ணமியையட்டி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வசதியாக கிரிவலம் பாதையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் நேற்று நடந்த பவுர்ணமியின்போது தன்னார்வலர் சார்பில் தற்காலிக சிறுநீர் கழிவறை அமைக்கப்பட்டிருந்தது. கிரிவலப் பாதையை சுகாதாரமாக பாதுகாக்க இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை கண்டு பக்தர்கள் பாராட்டி சென்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து