முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி குறைந்த 71 அரசு பள்ளிகளுக்கு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடை புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மேலும் மாலை நேர சிறப்பு வகுப்புகள், வாரந்தோறும் திருப்புதல் தேர்வு, மாதந்தோறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, மாணவர்களின் வருகையை தினசரி கண்காணித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மேற்கொண்டுள்ளார்.

சிறப்பு முயற்சி

அதன்தொடர்ச்சியாக கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 71 அரசு பள்ளிகளின் தேர்ச்சியை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பதற்கான சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதையட்டி சம்பந்தப்பட்ட 71 பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை பெற்றோர் ஆசிரயர் கழகம் வழங்கும் மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், வழிகாட்டவும் 13 கள ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சி குறைந்த 71 பள்ளிகளுக்கும் கள ஆய்வாளர்கள் நேரடியாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுதல் கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு பயிற்சிகளை முறைப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

அதையட்டி புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கள ஆய்வாளர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பள்ளிகளின் முன்னேற்றம் குறித்து வாரத்திற்கு ஒருமுறை அறிக்கையாக அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரின் கற்றல் அடைவுகளை கண்காணிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து