முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் ஒன்றியத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கி நியாயவிலை கடைகட்டிடத்தை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் ஒன்றியம்; மூதூர் மற்றும் வளர்புரம் கிராமங்களில் நூற்றுகணக்கான மக்களுக்கு டிவிடண்ட் தொகை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி நியாயவிலை கடைகட்டிடத்தையும் எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார் இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி, அரக்கோணம் ஒன்றியம், மூதூர் கிராமத்தில் விஎல்201 மூதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரூ4.75 லட்சம் மதீப்பீட்டிலான புதிய நியாய விலை கடை கட்டிடம் திறந்து. தமிழகஅரசின் இலவச பொங்கல் பொருட்களை மக்களிடம் எம்எல்ஏ சு.ரவி வழங்கினார்.

புதிய நியாய விலை கடை

இந்தவிழவிற்கு கடன்சங்க தலைவர் ஈ.வெங்கடேசன், தலைமை தாங்கினார் செயலாளர் யக்னேஸ்வரராவ் வரவேற்று பேசினார். இயக்குனர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் விஎல்121 வளர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் ஆர்.அய்யப்பரெட்டி தலைமை தாங்கினார். செயலாளர் ஈ.சீனிவாசன் வரவேற்று பேசினார். இந்தாண்டில் கடன்சங்கம் ரூ18.19லட்சம் லாபம் ஈட்டியதால் 1369 ஏ-வகுப்பு உறுப்பினர்களுக்கு

14சதவிகித டிவிடண்ட் தொகையும், அனைத்து மக்களுக்கு பொங்கல் பொருட்களையும் எம்எல்ஏ சு.ரவி வழங்கி பேசினார். இந்த இருவிழாவிலும் வட்டவழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு பதிவாளர் ஜீவன்சிங், ஊர்முக்கியஸ்தர்கள் ஈ.பிரகாஷ், தருமன், காந்திரெட்டியார், நாகபூஷணம், முத்தப்பன், ஏஎல்.நாகராஜ், கணேசரெட்டி, சாலைபழனி, மோகன், திருமலை, பச்சையப்பன், தூர்வாசலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து