முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணும் பொங்கல் உற்சாகம் சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      திருவண்ணாமலை

காணும் பொங்கல் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தி.மலை அண்ணாமலையார் கோவில் சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை ஆகிய சுற்றுலா தலங்களில் ஏராளமான மக்கள் திரண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதையட்டி 1750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காணும் பொங்கல்

தமிழரின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அத்துடன் தனக்கு வாழ்வளிக்கும் இயற்கையையும், கால்நடைகளையும் வணங்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் 3வது நாளான நேற்று காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் கோவில், சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை மற்றும் பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காணும் பொங்கலையட்டி கடந்த 2 நாட்களாக சாத்தனூர் அணைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. காணும் பொங்கலை யட்டி சாத்தனூர் அணைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 1750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களில் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காட்டுப்பகுதி, நுழைவு பகுதி காவல்நிலையம் எதிரில் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அணையின் உள்ளே செல்ல அனுமதித்தனர். அதிக மக்கள் கூடும் இடங்களில் பெண் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே பொங்கல் தொடர் விடுமுறையையட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் காணும் பொங்கலான நேற்றும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்ததால் சா£த்தனூர் அணை களைகட்டியது. இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து சாத்தனூர் அணையின் அழகை கண்டு ரசித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து