முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் மாவட்டம்,பழவேற்காட்டில் அரசு சார்பில் பொங்கல் சுற்றுலா கலை நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பழவேற்காடு கடற்கரையில் அரசு சார்பில் பொங்கல் சுற்றுலா கலை நிகழ்ச்சி-2018 மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில் நடைப்பெற்றது.

15 ஆம் நூற்றாண்டு

 பழவேற்காடு எனும் தீவுப்பகுதியானது மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க பகுதியாகும்.கி.மு.300 தொடங்கி 15 ஆம் நூற்றாண்டு வரை ஒரு மிகப்பெறிய இயற்கைத்துறைமுகமாக இது விளங்கி வந்திருக்கின்றது.பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலம்,புனித அந்தோனியார் ஆலயம் 3.டச்சு கல்லறை,சின்னப்பள்ளி நிழற்கடிகாரம்,கலங்கரைவிளக்கம்,ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,சமய ஈஸ்வரர் திருக்கோயில்,ஜல்ரியா கோட்டை,கடற்கரை,முகத்துவாரம்,பக்கிங்காம் கால்வாய்,எடமணி ஜடராயன் திருக்கோயில்,சிந்தாமணி ஈஸ்வரர் திருக்கோயில்,பழவேற்காடு மேம்பாலம்,தோணிரேவு படகு குழாம்,திருப்பாலீஸ்வரர் திருக்கோயில்,பழவேற்காடு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,பழவேற்காடு பறவைகள் சரணாலயம்,பழவேற்காடு மீன் அங்காடி,வனத்துறை அலுவலகம்,காளிகாம்பாள் திருக்கோயில்,காமராஜர் துறைமுகம் ,காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்.காட்டுப்பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்,ஒரு வருடம் கெடாமல் தண்ணீரை பாதுகாக்கும் சீன பீங்கான் பானைகள் என பல முக்கிய பார்வையிடும் இடங்களைக் கொண்டு விளங்குகின்றது.

இதற்க்கு மெருகூட்டும் வகையில் இதுவரை பழவேற்காடு வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பொங்கல் சுற்றுலா கலை நிகழ்ச்சி-2018 எனும் சுற்றுலா பயணிகளை கவரும் நிகழ்ச்சி காணும் பொங்கல் தினத்தன்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,கோட்டாட்ச்சியர் முத்துசாமி,வட்டாட்சியர் சுமதி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன்,ராஜேந்திரபாபு,முன்னாள் ஒன்றிய துணைச்சேர்மன் சுமித்ராகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நாதஸ்வர நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் பரதநாட்டியம்,கரகாட்டம்,தப்பாட்டம்,கிராமிய நடனம்,கிராமிய பாடல்,சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்சிகள் நடைப்பெற்றது.

இலட்சக்கணக்கில் பழவேற்காடு கடற்கரையில் குவிந்த மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் உற்சாகத்தை அளித்தது.இதுவரையில் இல்லாத அளவிற்க்கு பொதுமக்கள் வசதிக்கென சிற்றுண்டி கடைகளும்,குடிநீர் வசதிகளும்,மொபைல் கழிப்பறை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்துக் கொடுக்கப்பட்டன.இருநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் சாலை போக்குவரத்து அதிகாரிகள்,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாதுறை அதிகாரிகள்,சிறப்பு தாசில்தார் புகழேந்தி,வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன்,மண்டல துணை வட்டர வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்,கிராம நிர்வாக அலுவலர் செந்தில்,லைட் ஹவுஸ் பஞ்சாயத்து உதவியாளர் மகேந்திரன்,மீனவ பிரதினிதிகள் எத்திராஜ்,தேசப்பன்,வைரவன்குப்பம் ஞானமூர்த்தி,மாதவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து